×

திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் 2 நாள் பிரசாரம்


தர்மபுரி, மார்ச் 19:  தர்மபுரி மாவட்டத்தில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பிரசாரம் ெசய்கிறார்.
தர்மபுரி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல், பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் 2 நாள் பிரசாரம் மேற்கொள்கிறார். வரும் 22ம் தேதி மாலை 5 மணிக்கு, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கான பிரசார பொதுக்கூட்டம் ஒடசல்பட்டி கூட்ரோட்டில் நடக்கிறது. 23ம் தேதி காலை 10 மணிக்கு, அரூர் அண்ணா சிலை அருகில் நடக்கும் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி, அரூர் சட்டமன்ற தொகுதிக்கான பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசுகிறார். இத்தகவலை, தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Tags : MK Stalin ,campaign ,DMK ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...