×

தேர்தல் பிரசாரத்தின் போது வேட்டி, சேலை வழங்க தடை

தர்மபுரி, மார்ச் 19: தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 10ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தல் பிரசாரத்தின் ஊர்வலங்கள் மற்றும் பேரணி ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் கொடிகள், பேனர்கள், கட் அவுட்கள் ஆகியவை வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும். ஊர்வலங்கள் மற்றும் பேரணியில் கட்சி தொண்டர்களுக்கு தொப்பி, முகமூடி ஆகியவற்றை மட்டும் வழங்கலாம். இவையும் வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.  தொண்டர்களுக்கு புடவை மற்றும் வேட்டி, சட்டை மற்றும் இதர பரிசு பொருட்கள் வழங்குவதற்கு அனுமதி இல்லை.  பொது இடங்களில் ஊர்வலங்கள், பேரணி மற்றும் கூட்டங்கள் ஆகியவை நடத்தப்படும் போது, பிளாஸ்டிக்காலான பொருட்கள் பயன்படுத்தாமல் மாற்று பொருட்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும். என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags : election campaign ,
× RELATED திருவாரூர் அருகே கொரடாச்சேரியில்...