×

விதிமீறல் புகார் தெரிவிக்க விழிப்புணர்வு பிரசாரம்

தர்மபுரி, மார்ச் 19:  தர்மபுரி மாவட்டத்தில் திருநங்கைகளிடம் விதிமீறலுக்கு புகார் செய்யும் விசில் ஆப் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் விதிமீறல்களை நேரடியாக தெரிவிக்க, மொபைல் ஆப் பயன்படுத்துதல் மற்றும் 1950 என்ற தொலைபேசி  மூலம் தேர்தல் தொடர்பான சந்தேகங்களையும், புகார்களையும் தெரிவிப்பதற்கான விழிப்புணர்வு கூட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காளிதாசன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து நல்லம்பள்ளி அருகே முண்டாசு புறவடை கிராமத்தில் வசிக்கும் திருநங்கைகளிடம், நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு, தேர்தல் விதிமீறல்களை நேரடியாக தெரிவிக்க மொபைல் ஆப் மற்றும் 1950 தொலைபேசி எண் மூலம் தேர்தல் தொடர்பான சந்தேகங்களையும், புகார்களையும் தெரிவிப்பதற்கும் மற்றும் விவிபேட் மிஷின் குறித்த செயல் விளக்கத்தை மகளிர் திட்ட அலுவலர் ஆர்த்தி விளக்கினார்.
தர்மபுரி நகராட்சி நகர்புற வீடற்றோர் உண்டு உறைவிடத்திலும் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இந்நிகழ்வில் மகளிர் திட்ட உதவித் திட்ட அலுவலர் மாரிமுத்துராஜ் மற்றும் தாசில்தார் இளஞ்செழியன் மற்றும் அனைத்து துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா