கடையநல்லூரில் கந்தூரி விழா

கடையநல்லூர், மார்ச் 19: கடையநல்லூர் செய்யது மக்தூம் ஜிஹானி ஜிஹாங் கஷ்த் வலியுல்லாஹ் கந்தூரி விழா விமரிசையாக நடந்தது. கடையநல்லூர் செய்யது மக்தூம் ஜிஹானி ஜிஹாங் கஷ்த் வலியுல்லாஹ் கந்தூரி விழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் ரஜப் பிறை 14ம் இரவு வரை தினமும் மாலை 5 மணிக்கு மௌலூது ஷரீபும், ராத்திபும் நடந்து வருகிறது. நேற்று 18ம் தேதி மதியம் யானை மீது கொடி ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இரவில் கொடி ஊர்வலத்துடன் சந்தனக்கூடு ஊர்வலமும் நடந்தது. தொடர்ந்து கொடி மற்றும் சந்தனக்கூடு இறக்குதல், சந்தனம் பூசுதல் நடந்தது. இதில் பள்ளிவாசல் தலைவர் சேக்உதுமான், செயலர் முஜிப்ரகுமான், பொருளாளர் சாகுல்ஹமீது, இஸ்மாயில், டி.எஸ்.எம்.இஸ்மாயில், அப்துல்காதர், முகமது இப்ராகிம், டி.எஸ்.அப்துல்காதர், நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ், மேலாளர் வைரவநாதன், சுகாதார அலுவலர் நாராயணன், கணேசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விழாவில் இன்று (19ம் தேதி) இரவு 7 மணி முதல் தீப உற்சவம், மேளவாத்தியம், வாணவேடிக்கை நடக்கிறது. நாளை (20ம் தேதி) இரவு மௌலூது ஷரீபு நடக்கிறது. 21ம் தேதி பகலில் மௌலூத் ஷரீப் ஓதி தப்ருக் என்னும் நேர்ச்சை வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை தர்ஹா பரம்பரை இனாம்தார்கள் கமிட்டியினர் செய்துள்ளனர்.

Related Stories: