×

காரையாறு பகுதியில் சாலையில் திரியும் மிருகங்கள்

வி.கே.புரம், மார்ச் 19: பாபநாசம், முண்டந்துறை வனச்சரகங்களில் உள்ள பகுதிகளில் சாலையில் குட்டிகளுடன் வனவிலங்குகள் சுற்றித் திரிகின்றன. பாபநாசம் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மிளா, மான், குரங்கு, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவற்றின் இனப்பெருக்க காலம் ஜனவரி முதல் மார்ச் வரை ஆகும். இதனால் வனத்துறையினர் இந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை காரையாறு பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்திருந்தனர். இதனால் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் காரையாறு பகுதிக்கு செல்லாததால் வன விலங்குகள் எவ்விதமான அச்சமின்றி சுதந்திரமாக வனப்பகுதியிலுள்ள சாலை பகுதியில் தங்களது குட்டிகளோடு உலாவருகின்றன. இப்பகுதியின் மரங்களில் வைக்கப்பட்டுள்ள கேமராக்களில் இக்காட்சிகள் பதிவாகி உள்ளன. கடந்த 2 வாரங்களுக்குமுன் சிறுத்தை, யானை, மிளா உள்ளிட்ட மிருகங்கள் பதிவாகியிருந்த    காட்சியை வனத்துறையினர் வெளியிட்டனர். நேற்று காட்டெருமை தனது குட்டியோடு வனத்தில் உலாவரும் காட்சியை வெளியிட்டு உள்ளனர்.

Tags : road ,area ,Karaiyar ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...