×

சிவகிரியில் தேர் திருவிழா ஆலோசனை கூட்டம்

சிவகிரி, மார்ச் 19: சிவகிரி தேர்த் திருவிழா, தெப்ப உற்சவம் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. சிவகிரி ஜமீனுக்குப் பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டத் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுககான திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் பல்வேறு மண்டகபடிதாரர்களின் சார்பில் சிறப்பு  நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. முக்கியத் திருவிழாவான தேரோட்டம்  நாளை  (20ம் தேதி), தெப்பத் தேர்த்திருவிழா நாளை மறுதினமும் (21ம் தேதி) விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் திருவிழாவை எவ்வித பிரச்னையும் இல்லாமல் சுமூகமாக நடத்தி முடிப்பது தொடர்பாக சிவகிரி காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது. இதில், தேரோட்டத்தின்போது வடம்பிடித்து இழுப்பவர்கள் சாதி சம்பந்தப்பட்ட கொடி, பனியன், ரிப்பன் போன்றவற்றை அணியவோ, பயன்படுத்தவோ கூடாது. சாதி தொடர்பான முழக்கம் எழுப்பக்கூடாது. மது அருந்திவிட்டு வடம் பிடிக்கக்கூடாது. குடிநீர் பாக்கெட்டுகளை தவறான முறையில் பயன்படுத்துதல் கூடாது. குறிப்பாக மற்றவர்கள் மீது பீய்ச்சி அடிக்கக்கூடாது, தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கீரக்கடை சந்திப்பு, கருப்பசாமி கோவில் சந்திப்பு, பள்ளிவாசல் சந்திப்பு, ஏழாம் திருநாள் மண்டகப்படி சந்திப்பு ஆகிய 4 இடங்களில் மட்டுமே பக்தர்கள் வசதிக்காக தேரை சற்று நேரம் நிறுத்த அனுமதி வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : consultation meeting ,Chariot Festival ,Sivagiri ,
× RELATED பெரிய நாகபூண்டியில் சிறப்பு பெற்ற நாகேஸ்வரர் கோயில் தேர் திருவிழா