கோவில்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி

கோவில்பட்டி, மார்ச் 19: கோவில்பட்டியில் தேர்தல் துறை சார்பில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களித்திட வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது. கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு துவங்கிய இருசக்கர வாகன பேரணியை தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோவில்பட்டி ஆர்.டி.ஓ.அமுதா, தாசில்தார் பரமசிவன், தேர்தல் துணை தாசில்தார் ராமகிருஷ்ணன், மேற்கு, கிழக்கு இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், சுதேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தாலுகா அலுவலகம் முன்பு துவங்கிய பேரணி, எட்டயபுரம் ரோடு, கதிரேசன்கோயில் ரோடு, பார்க்ரோடு, அண்ணா பஸ்நிலைய ரோடு, மார்க்கெட்டு ரோடு, புதுரோடு, அரசு மருத்துவமனை ரோடு வழியாக தாலுகா அலுவலகத்தில் நிறைவு பெற்றது. பேரணியின் போது தேர்தலில் 100 சதவீதம் வாக்களித்திடவும், தகுதியான அனைவரும் வாக்குபதிவை தவறாமல் பதிவு செய்ய வேண்டும், வாக்களிப்பது ஜனநாயக கடமை உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குபதிவு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், வியாபாரிகள், பயணிகளிடம் விநியோகம் செய்யப்பட்டது.

Related Stories: