×

உப்பிலியபுரத்தில் நடந்த வாகன சோதனையில் ரூ.1.20லட்சம் அபராதம் வசூல் மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி

துறையூர், மார்ச் 19: உப்பிலியபுரத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் நடத்திய வாகன சோதனையில் உரிமம் புதுப்பிக்காதது, அதிகமான பாரம் ஏற்றி வந்தது உள்பட  வாகனங்களுக்கு ரூ.1.20லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது. துறையூர் பகுதிகளில் வாகனத்திற்கு அரசு நிர்ணயம் செய்த தொகையை செலுத்தாமல் அரசை ஏமாற்றி விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டப்படுவதாக ரங்கம் மோட்டார் வாகன அலுவலர் பாண்டியனுக்கு புகார் சென்றது. அவரது அறிவுறுத்தலின்படி துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் காவல் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது உப்பிலியபுரம்-துறையூர் சாலையில் வந்த லோடு வேனை தடுத்து சோதனை செய்தபோது, தகுதிச்சான்று  புதுப்பிக்கப்படாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  அந்த வாகனத்தை பறிமுதல் செய்து உப்பிலியபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அரசுக்கு செலுத்தப்படவேண்டிய தொகையை செலுத்தாமல் 2 வருட காலமாக ஏமற்றி வந்த 2 பொக்லைன் இயந்திரங்களை கண்டுபிடித்து அபராத தொகை ரூ.70 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இதேபோல் அதிக பாரம் ஏற்றிவந்த 3 கனரக வாகனங்களை பிடித்து தலா ரூ.7 ஆயிரம் வீதம் ரூ. 21 ஆயிரம் இணக்கக்கட்டணம் விதிக்கப்பட்டது.

Tags : Uppiliyapuram ,
× RELATED போலீஸ் விசாரணை உப்பிலியபுரம்...