×

அரிமளம் அருகே சண்டையை விலக்க சென்ற கட்சி பிரமுகருக்கு சரமாரி தாக்கு 7 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

திருமயம், மார்ச் 19:புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஆனைவாரி கிராமத்தை சேர்ந்தவர்கள் காந்தி(65). இவரது மகன்ராமையா(35). இவர்களுக்கும் அதே தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பூசையா (47) குடும்பத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று பூசையா தரப்பினர் பொதுப் பாதையில் ஜல்லி கற்கள் கொட்டி வைத்துள்ளனர். இதனை அள்ளும்படி காந்தி கேட்டுக் கொண்ட போது இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஏற்கனவே இரு குடும்பங்களுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்த நிலையில், இந்த பிரச்னை கைகலப்பை நோக்கி சென்றது. இதனை அறிந்த பக்கத்து வீட்டுக்காரரான ராமசாமி மகன் அன்பில் முத்து (40) இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அன்பில் முத்து மீது ஆத்திரமடைந்த பூசையா தரப்பினர் அரிவாள், உருட்டை கட்டை கொண்டு தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதில் காந்தி, ராமையா காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அன்பில் முத்துவுக்கு தலையில் பலத்த காயம் எற்பட்டதால் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுபற்றி காந்தி கொடுத்த புகாரின் பேரில் பூசையா இவரது சகோதரர்கள் ஆறுமுகம், சக்திவேல் உள்ளிட்ட 7 பேர் கும்பல் மீது அரிமளம் போலீசார் வழக்கு பதிந்து தீவிரமாக தேடி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அன்பில் முத்து ஏற்கனவே காங்கிரஸ் இளைஞரணி பொறுப்பில் இருந்து விலகி தமாகா இளைஞரணி  மாநில பொறுப்பு வகித்து வந்தார். தற்போது நாடாளுமன்ற தேர்தலில் தமாகா அதிமுக கூட்டணியில் இணைந்தால் கடந்த வாரம் இளைஞரணி பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags : party ,group ,Arimala ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...