×

திமுக தகவல் தொழில்நுட்ப அணி பயிற்சி கூட்டம்

புதுக்கோட்டை, மார்ச்19:  புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட தவகல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் பயிற்சி கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் இலக்குவன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ ரகுபதி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர்கழக தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் திமுக ஐடிவிங் செயலி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.  ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட தவகல் தொழில்நுட்பட அணி அமைப்பாளர் குருஞ்சிவாணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : DMK Information Technology Team Training Meeting ,
× RELATED போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறி பார்...