×

தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை, மார்ச்19: புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமை தாங்கினார். தாசில்தார் பரணி முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைபிடிப்பது தொடர்பாகவும், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் வழங்குவதை தடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன், கருணாகரன், தினேஷ்குமார் மற்றும்  எஸ்ஐக்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Election consultation meeting ,
× RELATED முறைப்படி அழைப்பு வராததால் தேர்தல்...