×

அறந்தாங்கி பகுதியில் அரசு அனுமதியின்றி ஜோராக இயங்கும் மதுக்கடைகள் தேர்தலுக்காக வீடுகளிலும் சரக்குகள் பதுக்கல்

அறந்தாங்கி, மார்ச் 19: அறந்தாங்கியில் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் மதுக்கடைகளில் இருந்து தேர்தலின்போது பயன்படுத்துவதற்காக மதுபாட்டில்களை வீடுகளில் பதுக்கும் நடவடிக்கைகளை சில கட்சியினர்
தொடங்கி உள்ளனர். தேர்தல் என்றாலே தொண்டர்களுக்கு உற்சாகம்தான். அதிலும் சில கட்சியினர் தொண்டர்களை எப்போதும் தக்கவைத்துக் கொள்ள ஆயுதமாக பயன்படுத்துவது, மதுபானத்தைத்தான் நாள்முழுதும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் தொண்டர்களுக்கு இரவு பிரசாரம் முடிந்தபின் கட்சியினர் பணமும், ஒரு குவார்ட்டர் மதுபான பாட்டில்களை கொடுப்பது வாடிக்கை. அதுபோல மதுபான பாட்டில்களை தொண்டர்களுக்கு வழங்காவிட்டால் தொண்டர்கள் உற்சாகம் இழப்பதால், மறுநாள் பிரசாரத்திற்கு செல்ல மாட்டார்கள். இதனால் தினசரி தொண்டர்களை குஷிபடுத்துவதற்காக மதுபானங்களை வழங்குவதை சில அரசியல் கட்சிகள் வாடிக்கையாக கொண்டுள்ளன. தமிழத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகளை மதியம் 12 மணிக்குத்தான் திறந்து மதுவிற்பனையை தொடங்க வேண்டும். ஆனால் அறந்தாங்கி நகரில் உள்ள அனுமதி பெற்ற மற்றும் அனுமதி பெறாத  டாஸ்மாக் மதுபானக்கடையுடன் இணைந்த பார்களில் காலை 6 மணிக்கே மதுபான விற்பனை தொடங்கி விடுகிறது. இதனால் காலை 6 மணிக்கே தொழிலாளர்கள், விவசாயிகள், கூலித்தொழிலாளிகள்,மாணவர்கள் என ஏராளமானவர்கள் மதுக்கடைகளுக்கு சென்று மது அருந்த தொடங்கி விடுகின்றனர்.

இதுகுறித்து சமூகஆர்வலர் ஒருவர் கூறியதாவது: உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அறந்தாங்கி நகரில் இருந்த அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்பட்டனர். பின்னர் தமிழக அரசு நகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள், நகரப்பகுதியில் உள்ள இடங்களை வகை மாற்றம் செய்து மீண்டும் டாஸ்மாக் மதுபானக்கடைகளை திறந்துள்ளன. தற்போது அறந்தாங்கி  நகரில் மட்டும் 10 டாஸ்மாக் மதுபானக்கடைகளை
திறந்துள்ளது. இதில் 5 கடைகள் மட்டுமே அனுமதி பெற்றுள்ளன. மீதமுள்ள 5 கடைகள் இதுவரை அனுமதி பெறவில்லை. அதேபோல தினமும் காலை 6 மணிக்கே டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்த பார்கள் திறக்கப்பட்டு மது விற்பனை ஜோராக நடக்கிறது. இதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்தாலும், அவர்கள் கண்டுகொள்வதில்லை. அறந்தாங்கி  டி.எஸ்.பியாக பொறுப்பேற்ற கோகிலா, அறந்தாங்கி பகுதியில் அனுமதிபெறாத மதுவிற்பனையை  தடுக்க  தீவிர முயற்சி மேற்கொண்டார். பல இடங்களில் அனுமதி பெறாமல் மதுவிற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து அறந்தாங்கி நகரில் அனுமதி பெறாத மதுவிற்பனை குறைந்தது. இருப்பினும் தற்போது, தேர்தலை மையமாக வைத்து சட்டவிரோத மது விற்பனை  சூடுபிடித்துள்ளது. தேர்தல் நேரத்தில் தொண்டர்களை மகிழ்விப்பதற்காக தற்போது  டாஸ்மாக் மதுபானக்கடை மற்றும் பார்களில் இருந்து ஆயிரக்கணக்கான மதுபான பாட்டில்களை சிலர் சட்டவிரோதமாக வாங்கிச் சென்று, வீடுகள், தோப்புகளில் பதுக்கி வருகின்றனர். இதுதவிர மதுபானம் பற்றாக்குறை இல்லாமல் வழங்க வசதியாக, அறந்தாங்கியை சுற்றிலும் பல்வேறு இடங்களில் குட்கா பதுபானம் தயாரித்தும் சிலர் பதுக்கி வருகின்றனர் இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் காவல்துறையினர் எந்த அரசியல்வாதிகளுக்கும் பயப்படாமல், அறந்தாங்கிநகரில்  அனுமதி பெறாமல் செயல்படும் டாஸ்மாக்  மதுபானக்கூடங்களையும் மூடுவதோடு, சட்டவிதிகளின் படி பகல் 12 மணிக்கு மேல் மட்டுமே மதுபானம் விற்பதை  காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.  தடுக்க  தீவிர முயற்சி அறந்தாங்கி டி.எஸ்.பியாக பொறுப்பேற்ற கோகிலா, அறந்தாங்கி பகுதியில் அனுமதி பெறாத மதுவிற்பனையை  தடுக்க  தீவிர முயற்சி மேற்கொண்டார். பல இடங்களில் அனுமதி பெறாமல் மதுவிற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து அறந்தாங்கி நகரில் அனுமதி பெறாத மதுவிற்பனை குறைந்தது. இருப்பினும் தற்போது, தேர்தலை மையமாக வைத்து சட்டவிரோத மது விற்பனை  சூடுபிடித்துள்ளது.

6 மணிக்கே விற்பனை துவக்கம்
அறந்தாங்கி நகரில் உள்ள அனுமதி பெற்ற மற்றும் அனுமதி பெறாத  டாஸ்மாக் மதுபானக்கடையுடன் இணைந்த பார்களில் காலை 6 மணிக்கே மதுபான விற்பனை தொடங்கி விடுகிறது. இதனால் காலை 6 மணிக்கே தொழிலாளர்கள், விவசாயிகள், கூலித்தொழிலாளிகள்,மாணவர்கள் என ஏராளமானவர்கள் மதுக்கடைகளுக்கு சென்று மது அருந்த தொடங்கி விடுகின்றனர்.

Tags : Aranthangi ,area ,government ,houses ,election ,
× RELATED கடத்தப்பட்ட அரசு பஸ் விபத்தில் சிக்கியது