×

செங்குணம் மாரியம்மன் கோயில் சகடை சப்பரம் வெள்ளோட்டம்

பெரம்பலூர், மார்ச் 19: செங்குணம் மாரியம்மன் கோயில் புதிய சகடை சப்பரம் வெள்ளோட்டம் வெகு  விமரிசையாக  நடைபெற்றது. பெரம்பலூர் அருகே உள்ளது செங்குணம் கிராமம். இக்கிராமத்தில் அண்ணா நகர் பகுதியில் மாரி யம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடந்தோறும் ஆண்டு திருவிழாவும், 3 வருடத்திற்கு ஒரு முறை தேர்த் திருவிழாவும் சிறப்பாக  நடைபெறும். திருவிழாவின்போது தனியார் டிராக்டரில் மயில், குதிரை, சிங்கம் போன்ற வாகனங்களில்  மாரியம்மன் சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா நிகழ்ச்சி நடைப்பெறுவது வழக்கம்.   இந்தக்கோவிலுக்கென புதியதாக சகடை சப்பரம்  செய்ய வேண்டி கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள்  முடிவு செய்து, ஒவ்வொரு குடும்பத்திலி ருந்தும்  வரிவசூல் செய்து  ரூ.2 லட்சம் மதிப்பில் புதிய சகடை சப்பரம்  செய்யப்பட்டது. இதனையொட்டி நேற்று திருச்சி காவிரி ஆற்றிலிருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு சிறப்பு யாகம், பூஜை  செய்து  சகடை சப்பரத்தில் புனித நீர் உள்ள குடம் வைத்து தேரோடும் வீதியில் சகடை வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. புதிய சகடை சப்பரம்  மாரியம்மன் கோவி லில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதி கள் வழியாக இழுத்து வரப்பட்டு மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் செங்குணம் கிராமத்தார் மட்டுமன்றி, பாலாம்பாடி, அருமடல் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Stork Mariamman Temple ,
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது