×

திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து முசிறியில் 21ம்தேதி மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டம் முன்னேற்பாடு குறித்து கே.என்.நேரு ஆலோசனை

பெரம்பலூர்,மார்ச்19: பெரம்பலூர் பாராளுமன்றத்தொகுதி திமுக கூட்டணி வேட் பாளர் பாரிவேந்தர்(எ) பச்சமுத்துவுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் 21ம் தேதி முசிறியில் பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறி த்து, பெரம்பலூரில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக ஐஜேகே கட் சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட முசிறி, தாத்தையங்கார் பேட் டைரோடு அருகே வரும் 21ம் தேதி நடைபெறவுள்ள மாபெரும் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். இதனையொட்டி முசிறி பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள்குறித்தும், திமுக கூட்டணியின ரின் பிரசார வியூகம், வேட்பாளரின் வெற்றிக்கான வழிமுறைகள் குறித்தும் நேற்று மதியம், முன்னாள்அமைச்சரும், திமுக கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாள ருமான கே.என்.நேரு நேற்று பெரம்பலூரில் ஆலோசனை நடத்தினார்.

இதில் திமுக தோழமைக் கட்சிகளின் சார்பாக ஐஜேகே கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து, மாநிலப் பொதுச்செயலாளர் ஜெயசீலன், மதிமுக அரசியல்ஆலோசனைக் குழுஉறுப்பினர்கள் வரதராஜன், துரைராஜ், மாவட்டசெயலாளர் சின்னப்பா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக மாவட்டச்செயலாளர் குதரத்துல்லா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச்செயலாளர் மீரான்மொய்தீன், இந்தியத் தொழிலாளர் மக்கள் முன்னே ற்றக் கழகத்தலைவர் ஈஸ்வரன், பொதுச்செயலாளர் அருண்குமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர். திமுக சார்பாக தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், மாவட்ட துணைச் செயலாளர்கள் பாஸ்கர், நூருல்ஹிதாஇஸ்மாயில், மாவட்டப்பொருளாளர் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, முகுந்தன், ஒன்றியசெயலாளர்கள் , நகரச்செயலாளர் பிரபாகரன் மற்றும் திருச்சி மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின்போது, ஐஜேகே கட்சி மாவட்டத்தலைவர் அன்பழகன் உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டனர்.

Tags : Parivanthar ,DMK ,MK Stalin ,
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...