×

டூவீலரில் சென்றவர் மீது டிராக்டர் மோதி படுகாயம்

பெரியகுளம், மார்ச் 19: பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்தில் டிராக்டர் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்தார். பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்தவர் செல்லம்(47). இவர் இரு சக்கர வாகனத்தில் பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். பெரியகுளம்-மதுரை சாலையில் உள்ள பழைய ஆர்.டி.ஓ.அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த டிராக்டர் மோதியதில் செல்லம் படுகாயமடைந்தார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் செல்லத்தை பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்ததையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பெரியகுளம் வடகரை காவல்துறையினர் டிராக்டர் ஓட்டி வந்த புல்லக்காபட்டி வடக்குத்தெருவை சேர்ந்த சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...