×

தகிக்கும் வெயிலை தணிக்கும் தர்பூசணி

‘‘உஷ்... அப்பப்பா... என்னா வெயிலு... பொளந்து கட்டுதேப்பா...’’ - இப்படி ஒரு புலம்பலை வீடுதோறும் கேட்கலாம். நாமளும் புலம்பி இருப்போம். கொளுத்தும் வெயிலுக்கு இதமாக குளிர்ச்சியாய் ஏதாவது சாப்பிடலாம்னு தோணும் இல்லையா? ஒண்ணுமில்லை. ஒரு மண் பானை வாங்கி நன்னாரி வேர், ஒரு 2 ஸ்பூன் சீரகம் போட்டு தண்ணீரை ஊத்தி, ஆத்து மணலை கொட்டி அரை நாள் கழிச்சு குடிச்சு பாருங்க... குளிர்ச்சியாகவும் இருக்கும்.
சரி... கொஞ்ச நேரத்துக்கு ஓகே... கூடுதல் நேரத்துக்கு குளுகுளு தாங்குற மாதிரி, ஏதாவது இருக்கான்னு கேட்குறீங்களா? இருக்கு.. அதுதான் தர்ப்பூசணி. வெயில் லேசா தலை காட்டினாலே போதும். தடுக்கி விழுந்தாலே தர்பூசணி கடைங்கிற அளவுக்கு, பல கடைகள் முளைத்து நிற்கும். ஒரு துண்டு சாப்பிட்டாலே தாகம் மட்டுமல்ல... வயிறே நிறைந்து விடும். அந்த அளவுக்கு உடலுக்கு மிகமிக குளிர்ச்சி தரும் பூசணி வகையை சேர்ந்தது  தர்பூசணி.
துண்டுகளாவும் சாப்பிடலாம். லேசா சர்பத் ஊற்றியும் சாப்பிடலாம். ஏதோ வெயிலுக்கு இதமானது என்று மட்டும் எண்ணி விட வேண்டாம். உடலில் உள்ள பல உபாதைகளை சரி செய்யும் ஆற்றல் தர்பூசணிக்கு உண்டு. இதில் வைட்டமின் ‘பி 6’ உள்ளது. இது மூளையில் பல வேதிப்பொருட்களை  உற்பத்தி செய்ய உதவுகிறது. மனஅழுத்ததை போக்கும். பதற்றத்தை தணிக்கும் குணமுடையது. ஆஸ்துமா தெரியுமா? அரை கிலோ மீட்டருக்கு இரும வைக்கும் இந்த வியாதியை கட்டுப்படுத்தும் வைட்டமின் ‘சி’ தர்பூசணியில் இருக்கு பாஸ்.

சிறுநீர்  வெளியேறும்போது கடுக்குதா? அப்பவும் தர்பூசணி சாப்பிடலாம். இயல்பாக பிரித்து சிரமத்தை குறைக்கும். சிறுநீர் கற்களிலிருந்து இதன் விதைகள் நம்மைக்  காக்கும். ஒரு டேபிள் ஸ்பூன் விதைகளை காய வைத்து அரைத்து, அதில் கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஆறியதும் குடிங்க.. சிறுநீரக கல் பிரச்னை தீரும். நார்ச்சத்து அதிகமுள்ளது என்பதால் மலச்சிக்கலை போக்கும். அதுக்காக அள்ளி சாப்பிடக்கூடாது. அளவாக 2 பீஸ் சாப்பிடலாம்.
மேலும், தர்பூசணியில் பொட்டாசிய சத்துக்குள் அதிக அளவில் உள்ளன. இது மாரடைப்புக்கான வாய்ப்பை ஓரளவு தடுக்கும். இதயத்துடிப்பை சீராக்கும். இதில் உள்ள லைக்கோபீன் மார்பு, நுரையீரல், கர்ப்பப்பை, பெருங்குடல் போன்ற இடங்களில்  ஏற்படும் புற்றுநோயை தடுக்குமாம். நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துமாம். மாலைக்கண் மற்றும் கண் அழுத்த நோயையும் கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் தர்பூசணிக்கு உண்டு.  ஒரு 10 ரூபாய் பீஸ்ல இவ்வளவு விஷயம் இருக்கான்னுதானே ஆச்சரியப்படுறீங்க...! அது மட்டுமல்ல.. ஆண்மைக்குறைவை கட்டுப்படுத்தும் திறனும் தர்பூசணிக்கு உண்டு. இதில் உள்ள சிட்ருலின் சத்து அதிகம் உள்ளது. இச்சத்து தர்பூசணியில் வெள்ளையாக இருக்கும் பகுதியில் அதிகம் உள்ளது. எனவே பழத்தை சாப்பிடுவதோடு இந்த வெள்ளை பகுதியை சாப்பிடுவதால் ஆண்மை குறைபாடுகளை தடுக்கலாமாம்.

Tags :
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது