×

பொள்ளாச்சி சம்பவம் கண்டித்து நீதிமன்ற பணிகளை புறக்கணித்து தேனியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தேனி, மார்ச் 19: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தேனியில் வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சியில் அப்பாவி மாணவியர், வேலைக்கு சென்ற இளம்பெண்களை குறிவைத்து சுமார் 200க்கும் மேற்பட்டவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பாரபட்சமின்றி கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி, கல்லூரி மாணவ அமைப்பினர், சமூக தொண்டு நிறுவனத்தினர், அதிமுக, பாரதீய ஜனதா தவிர இதர அரசியல் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில் முன்பாக தேனி மாவட்ட வக்கீல் சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்க மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். துணை தலைவர் ஜெயக்குமார், துணை செயலாளர் அழகேந்திரன் உள்ளிட்ட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, பொள்ளாச்சி சம்பவத்தில் சிறுமியர் மற்றும் இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து, பணம் கொள்ளையடித்தவர்கள் எவ்வளவு செல்வாக்கு படைத்தவர்களாக இருந்தாலும், தயவுதாட்சன்யமின்றி, அரசியல் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். முன்னதாக, இச்சம்பவத்திற்காக தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்குப்பணிகளை வக்கீல்கள் புறக்கணித்து கோர்ட்டிலிருந்து வெளியேறினர்.

Tags : Attorneys ,Houston ,incident ,Pollachi ,court proceedings ,
× RELATED ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கைக்கான ஒப்பந்தம் புதுப்பிப்பு