×

சுகாதாரத்துறை அலட்சியத்தால் திறந்தவெளியில் இறைச்சி கடைகள்

ராமநாதபுரம், மார்ச் 19: ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், திறந்தவெளியில் இறைச்சி வெட்டி விற்பனை செய்யப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ராமநாதபுரம் நகர்பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஆட்டு இறைச்சி கடைகள் உள்ளன. இதுதவிர கேணிக்கரை உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் 50க்கும் அதிகமான ஆட்டு இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மீன்கடைகள் செயல்பட்டு வருகிறது. மீன்கடைகளின் இறைச்சி கழிவுகளை அகற்ற முறையான திட்டம் இல்லாததால், அப்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளில் கொட்டுவதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. ஆடுவதைக் கூடத்தை பெரும்பாலான இறைச்சி கடைக்காரர்கள் பயன்படுத்துவதில்லை.

ஆடுகள் அனைத்தும் கடைகளிலேயே அறுக்கப்படுகிறது. இதன் கழிவுகள் சாலைகளிலும், சாக்கடைகளிலும் கொட்டப்படுகிறது. சுகாதாரமற்ற முறையில் தெரு ஓரங்களில் திறந்தவெளி கடைகளை அமைத்து ஆடு, மீன், கோழி, இறைச்சி கடைகள் தாராளமாக செயல்பட்டு வருகிறது. சுகாதாரமற்ற நிலையில் இறைச்சி கடைகள் செயல்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து புகார் தெரிவித்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். ஆகையால் இறைச்சி விற்பனையில் நிலவும் சுகாதாரக்கேடுகளை களைய, நகர்நல அலுவலர், சுகாதாரத்துறை அலுவலர்கள் களமிறங்கி, பணியாற்ற வேண்டும் என பல்வேறு அமைப்புகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.டாக்டர்கள் அட்வைஸ்

Tags : Meat shops ,
× RELATED கும்பகோணத்தில் முழு ஊரடங்கு தடையை...