×

பரமக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

பரமக்குடி, மார்ச் 19: பரமக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சம்பத்குமாருக்கு மாவட்ட திமுக சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெறும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக பரமக்குடி நகர் இளைஞரணி அமைப்பாளர் சம்பத்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் ஆசிபெற்று நேற்று மாலை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

மாவட்ட எல்லையான மரிச்சுக்கட்டியில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. திசைவிரன் உறுப்பினர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு. ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், நயினார்கோவில் சக்தி ஆகியோர் வரவேற்றனர். பரமக்குடி ஓட்டபாலம், ஜந்துமுனை, பேருந்து நிலையம், கிருஷ்ணா தியோட்டர் ஆகிய பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக வெடிவெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் ராமநாதபுரம் சென்ற திமுக வேட்பாளர் சம்பத்குமார், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

Tags : candidate ,DMK ,constituency ,Paramakudi Assembly ,
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...