×

அரசு மருத்துவமனையில் அகற்றப்படாத அரசின் விளம்பரங்கள்

ராமநாதபுரம், மார்ச் 19: தேர்தல் விதிமுறை அமுலுக்கு வந்தும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரதமரின் படங்கள் அகற்றப்படாமல் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் கடந்த 10ம் தேதி இரவு முதல் அமல்படுத்தப்பட்டது. பறக்கும் படை, நிலைத்த கண்காணிப்பு குழு என மாவட்ட முழுவதும் 24 குழுக்கள், மண்ட அளவிலான 123 குழுக்கள் என தேர்தல் பணியில் உள்ளனர். மாவட்ட முழுவதும் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணித்து மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவிடம் அறிக்கை அளித்து வருகின்றனர்.

அரசு அலுவலகங்களில் அரசின் நலத்திட்ட போர்டுகள், படங்களை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட 24மணி நேரத்தில் அகற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் வரவேற்பு அறையில் பிரதமரின் படத்துடன் உள்ள விளம்பரங்கள், அம்மா காப்பீடு திட்ட அலுவலக விளம்பரம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் பழனிச்சாமி படங்கள் அகற்றப்படாமல் உள்ளது. தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அலுவலரும் பல முறை அறிவித்தும் அகற்றப்படாமல் அரசு சார்ந்த போர்டுகள், படங்கள் உள்ளது. எந்த அறிவிப்பும் எங்களை கட்டுப்படுத்தாது என்ற நிலையில் ராமநாதபுரம் மாவட்ட மருத்துவமனை அதிகாரிகள் உள்ளனர். இதேபோல நகரில் பல இடங்களில் தேர்தல் ஆணையம் பல முறை அறிவுறுத்தியும் அரசு சார்ந்த இடங்களில் படங்கள் அகற்றப்படாமல் உள்ளது. தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர். அரசியல் கட்சியினர் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் சரியில்லை. தேர்தல் ஆணையம் உத்தரவிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவது போல் உள்ளது. நேர்மையான முறையில் தேர்தல் நடவடிக்கை இருக்க வேண்டும் என்றனர்.

Tags : government hospital ,
× RELATED முற்றுகை போராட்டம்