×

பல ஆண்டுகளாக வீட்டு மனைபட்டாகிடைக்காததால் விரக்தி தேர்தலை புறக்கணிக்க நரிக்குறவ சமுதாயத்தினர் முடிவு சாதிச்சான்று தராததால் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியவில்லை

திருத்துறைப்பூண்டி,மார்ச் 19: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகத்திற்கு செல்லும் சாலையில் சாலையோரத்தில் நரிக்குறவ குடும்பங்கள் டெண்ட் அமைத்து வசித்து வந்தனர். பொதுமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பெரும் இடையூராக இருந்ததால் அப்போது திருவாரூர் மாவட்ட கலெக்டராக  இருந்த உமாசங்கர் நரிக்குறவசமுதாயத்தினரை திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் வயல் பகுதியில் அவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்தார். அதன் பிறகு அந்தபகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 90 நரிக்குறவ சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் வசிக்கும் இடம் அவரவர்களுக்கு வீட்டு மனைபட்டா வழங்குவதற்கு அரசால் அளவீடு செய்தும் இதுவரை பட்டா வழங்கவில்லை.பட்டா கேட்டு பலமுறை போராடியும் வீட்டு மனைபட்டா கிடைக்காததால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகநரிக்குறவ சமுதாயமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நரிக்குறவர்கள் சர்வோதயசங்கம் தலைவர் செல்வம் கூறுகையில் நாங்கள் வசிக்கும் வீரன் நகரில் 90க்கும் மேற்பட்ட குடும்பங்கள்வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தில் பாதித்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் அதிகாரிகள் வந்து பார்க்கும் போது அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அதேபோன்று இங்கு வசிப்பவர்களுக்கு வீட்டு மனைபட்டா கேட்டு பலஆண்டுகளாக போராடி வருகிறோம். பட்டா கிடைக்காததால் வரும் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் வீட்டுமனைபட்டா கிடைக்கும் வரைஅனைத்து தேர்தலையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
செல்விகூறுகையில்: எங்களுக்கு பெரும்பாலோனருக்கு சாதி சான்று கொடுப்பதில்லை, மேலும் வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்று கிடைப்பதில்லை. இதனால் பல குழந்தைகளை பள்ளியில் சேர்க்கமுடியவில்லை. நாங்கள்வசிக்கும் பகுதியிலேயேஅங்கன்வாடி மையம் திறந்தால் குழந்தைகளை படிக்க வைக்க முடியும். எனவேசாதி சான்று, பிறப்புசான்று வழங்குவதற்கு மாவட்டஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் நறிக்குறவசமுதாயத்தினர் வரும் தேர்தலை புறக்கணிப்போம் என்றார்.

Tags : children ,school ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...