×

திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற இணைந்து பணியாற்ற வேண்டும் செயல்வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவாரூர். மார்ச் 19: நாகை நாடாளுமன்ற தொகுதி மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற திமுகவினர் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் திருவாரூர் உட்பட 18 எம்எல்ஏ தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவை அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி நாகை நாடாளுமன்ற தொகுதியானது  திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதையடுத்து அக்கட்சியின் வேட்பாளராக முன்னாள் எம்.பி செல்வராசு அறிவிக்கப்பட்டுள்ளார்.  இதே போல் திருவாரூர் எம்எல்ஏ தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக கட்சியின் மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த நாகை எம்பி தொகுதி மற்றும் திருவாரூர் எம்எல்ஏ தொகுதி ஆகியவற்றின் செயல்வீரர்கள் கூட்டம் திருவாரூரில் நேற்று  திமுகவின் நகர அலுவலகத்தில் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட அவைத் தலைவர் சித்தமல்லிசோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு நாகை மாவட்ட அவைத்தலைவர் அம்பலவாணன், எம்எல்ஏக்கள் மதிவாணன், ஆடலரசன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம்பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருவாரூர் தொகுதியின் வேட்பாளரும் கட்சியின் மாவட்ட செயலாளருமான பூண்டிகலைவாணன் மற்றும் நாகை தெற்கு மாவட்ட  பொறுப்பாளர் தீனகவுதம,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை எம்பி தொகுதி வேட்பாளர் செல்வராசு மற்றும் நாகை, திருவாரூர் 2 மாவட்டங்களையும் சேர்ந்த தி.மு.கவின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக மற்றும் சார்பு அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் திமுக மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் அதிக வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றிபெற திமுகவின் அனைத்து அணிகளையும் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருடன் இணைந்து தேர்தல் பணியாற்றி வேட்பாளர்கள்  அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பணி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்வது நாளை நடைபெறும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அதிகமானோர் கலந்து கொள்ள ேவண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Tags : activists ,DMK ,meeting ,Coalition Party ,majority vote ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...