×

மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அடையாள அட்டைகளை பெறுவதற்கு மருத்துவ சான்றுகள் வழங்க ஏற்பாடு மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை ஏற்பு

மன்னார்குடி, மார்ச்19: தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கை யை ஏற்று  மன்னார்குடி இயங்கும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் ஒவ்வொரு வாரமும்  வெள்ளிக்கிழமை தோறும்  காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மாற்று திறனாளிகள் தங்களுக்கான அடை யாள அட்டைகளை பெறுவதற்கு தேவையான மருத்துவ சான்றிதழ்களை  வழங்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட  மாற்றுத்திற னாளிகள் உள்ளனர். இதில்  26 ஆயிரம்  பேருக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல  அலுவலகம் மூலம்  அரசால் வழங்கப்படும் தேசிய  அடையாள அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன. மேலும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் களுக்கு அடையாள அட்டைகள் வழங்க பட வேண்டும். மாற்று திறனாளி ஒருவர் தேசிய அடையாள அட்டை பெற முதலில் அரசு மருத்துவர் சான்று வழங்க வேண்டும். அந்த சான்றின் அடிப்படையிலேயே அடையாள அட்டைகளை மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம் வழங்கும். மேலும்  அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற தேசிய அடையாள அட்டை முக்கியமான ஆவணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டைகள் இல்லாத மாற்று திறனாளிகள் அரசின் எந்த ஒரு சலுகையும் பெறமுடியாது என்ற நிலை உள்ளது. அடை யாள அட்டைகள் மாவட்ட தலைநகரங்களில் இயங்கும் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இத் தகைய நடைமுறைகளால் தொலை தூரத்தில் வசிக்கும் மாற்று திறனாளிகள் அடையாள அட்டைகளை பெற நீண்ட  நாள் கணக்கில் காத்திருக்கும் சூழல் உள்ளது.

இதனை தவிர்த்திட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் கிராமப்புறங்களில் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளை பெறுவதற்கு முக்கிய ஆவண மாக மருத்துவ சான்றிதழ்களை  வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக மாற்று திறனாளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு மாற்று திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் தமிழரசன் கூறுகையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் வாரத்திற்கு ஒரு குறிப்பிட்ட நாளில் நேரத்தை ஒதுக்கீடு செய்தும், கிராமப்புறங்களில் இயங் கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட நாளில் நேரத்தை ஒதுக்கீடு செய்து துறை ரிதியான மருத்துவர்களை கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை பெறுவதற் கான மருத்துவ சான்றிதழ்களை உடன்  வழங்கிட அரசும் மாவட்ட நிர்வாக மும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். மேலும் இக்கோரிக்கைள் அடங்கிய மனுக்களை மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் தலைமை கண்காணிப்பாளரிடம்  கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து மன்னார்குடியில் இயங்கும் மாவட்ட அரசு தலைமை மருத் துவ மனையின் தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் பரிமளா பிரபாகரன் கூறுகையில், மாற்று த்திறனாளிகளுக்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் அடையாள அட்டை பெற மருத்துவ சான்றுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என மாற்று திறனாளிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுக் களை அளித்திருந்தனர். அதன் பேரில் மாற்றுத் திறனாளிகளின்  நியாயமான கோரிக்கைகளை கனிவு டன் பரிசீலித்து ஒவ்வொரு வாரமும்  வெள்ளிக்கிழமை தோறும்  காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை பெறுவ தற்கான மருத்துவ சான்றுகள் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளோம். இந்த வாய்ப்பை மாற்றுத் திறனாளிகள் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார்.

Tags : Government ,Head Hospital ,Mannargudi ,
× RELATED ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு பிரசாரம்