×

கூத்தாநல்லூரில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டது சமூக விரோதிகளின் கூடாரமான மீன் மார்க்கெட்

கூத்தாநல்லூர்,மார்ச்19: கூத்தாநல்லூர் நகராட்சியில்சுமார் 50 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில்கட்டப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராதமீன்மாக்கெட் கட்டிடம் , சமூகவிரோதிகளின் கூடாரமாகவும், சுகாதாரசீர்கேட்டுடனும் கிடக்கும் அவலத்தால்பொதுமக்கள்மார்க்கெட்டிற்குவரவேஅச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.புதியகட்டிடம் கட்டப்பட்டும் வியாபாரிகள் தகரத்தால் அடைக்கப்பட்டபழையகடைகளில்வியபாரம் செய்யவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
கூத்தநல்லூர் நகராட்சியில் 2015-16 ம் நிதியாண்டில் கட்டப்பட்டமீன்மார்க்கெட்கட்டிடம் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல்கிடப்பதால் வியாபாரிகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் வசதியற்றகடைகளில்இறைச்சிமற்றும் மீன் , கோழிக்கடைகளை நடத்தவேண்டியநிலைஏற்பட்டுள்ளது. மேலும் கட்டப்பட்டபுதியகட்டிடம் பாதுகாப்பின்றி திறந்து கிடப்பதாலும், பயன்படுத்தாமல் கிடப்பதாலும் சமூகவிரோதிகள்சிலர் அங்குவந்து மது அருந்திவிட்டு படுத்திருக்கும் அவலம் ஏற்படுகிறது. இதனால்பொதுமக்கள்அச்சத்துடன் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அங்குள்ளவாடிக்கையாளர்கள்சிலரிடம்கேட்டபோது”
கட்டப்பட்டிருக்கும்புதியகட்டிடத்தில்அமைக்கப்பட்டிருக்கும் செப்டிக்டேங் தொட்டியில் மூடி எதுவும் போடாமல் திறந்து கிடப்பதால்மக்கள்அதன் உள்ளேவிழுந்துவிடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.கட்டப்பட்டகட்டிடம் தற்போதுபொதுகழிப்பறையாகவேமாறி துர்நாற்றம் வீசி வருகிறது. புதியகட்டிடத்தின் கட்டப்பட்டிருக்கும் கடைகள்அனைத்திலும் குடிமகன்கள்’’ பயன்படுத்திவீசிய மது பாட்டில்களும், பிளாஸ்ட்டிக் டம்ளர்களுமே நிரம்பிக்கிடக்கிறது.

ஏற்கனவே 25வருடங்களுக்கு முன் 31 கடைகள் வரைசெயல்பட்டுவந்தஇந்தமார்க்கெட், பின்புசுமார் 25கடைகள்ஆக்கப்பட்டு,  தற்போதுவெறும் 16 கடைகளாககட்டப்பட்டு இருக்கிறது. கூத்தாநல்லூர் மக்கள்தொகைகடந்த25ஆண்டுகளில்ஏறக்குறையஇரண்டுமடங்குஅதிகமானநிலையில், பொதுமக்கள்பயன்பாட்டிற்குகட்டப்பட்டகடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதுவேதனையளிக்கிறதுஎன்றுதெரிவித்தனர். அங்கு மீன் கடைநடத்திவரும் வியாபாரிமுகம்மதுயூசூப் என்பவர் கூறியதாவது. இங்கு கட்டப்பட்டிருக்கும் புதியமார்க்கெட் கட்டிடம் போதுமான வடிவமைப்பில்கட்டப்பவில்லை, இந்தகட்டிடம் வடிவமைக்கப்படும் போது காலகாலமாக இங்கேவியபபாரம் செய்துவரும் வியபாரிகளிடம் எந்தவிதகலந்தாலோசனைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போதுஉள்ளநிலையில்கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்குவந்தால்லேசானமழைபெய்தாலேமழைநீர் உள்ளேவிழும் நிலையில்மேற்கூறைஅமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடு அறுக்கும் இடத்தின் வடிவமைப்பு மிக குறுகியதாக உள்ளதால் ஒரே நேரத்தில் பலர் நின்றுஆடுகளைஅறுக்கமுடியாமல்போகும் நிலை. இது இஸ்லாமியர்கள்அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் விசேடநேரங்களில்ஒரேநேரத்தில்பலஆடுகளைஅறுக்குநிலைஏற்படும்.பெண்கள்மார்க்கெட்டின் உட்புறம் வந்துதாராளமாகசெல்லஏதுவானமுறையிலும் கட்டிடவசதிஇல்லை. இதுகுறித்து   நகராட்சிஅலுவலகத்தில்புகார் தெரிவித்தும் எந்தபலனும் இல்லை.இந்தகட்டிடம் கட்டிஇரண்டுஆண்டுகளாக கிடப்பதால்சமூகவிரோதிகள் இங்கு வந்து மது அருந்திபோதையில்விழுந்து கிடக்கும் சூழல்ஏற்பட்டுவியாபாரம் செய்யமுடியாதநிலைஉள்ளது.அதனால்இங்கேவாடிக்கையாளர்களின் வருகை குறைவாகிப்போனதால்நாங்கள்மீன்களைமொத்தவிற்பனைமட்டுமேசெய்ய முடிகிறது என்றார்.

வியாபாரிநைனாமுகம்மது கூறியதாவது,மீன்மார்க்கெட் புதியகட்டிடத்தில்கழிவு நீர் வெளியறும் படியாக வடிவமைப்புஎதுவும் ஏற்படுத்தமால்கட்டப்பட்டு இருக்கிறது. மேலும் மார்க்கெட்டின் எதிர்புறம் பொதுமக்கள்பயன்படுத்தும் ஆறும், பக்கத்தில் கூத்தாநல்லூருக்கே குடிநீர் தரும் மேல்நிலைநீர்தேக்கதொட்டியும் அமைந்துள்ளதால் மீன் மார்க்கெட் கழிவு நீர் எந்தநேரத்திலும் அவைகளில்கலந்துவிடவாய்ப்புஉள்ளது. அதனால் இந்தகட்டிடத்தில் போதுமானகழிவுநீர்  வெளியேற்றவசதிசெய்யப்படவேண்டும். கடைகளின் இடையேஅமைக்கப்பட்டிருக்கும் பக்கவாட்டுசுவர் அளவுக்கு அதிகமானஉயரமாகஇருப்பதால்காற்றோட்டவசதியின்றி துர்நாற்றம் ஏற்படும் நிலைஏற்பட்டுள்ளது. தற்போதுவெளியேறும் மீன் கழிவுதண்ணீர் வெளியேறாதநிலையில் இங்கேயே தேங்கிக்கிடக்கிறது. மக்களுக்காககட்டப்பட்டிருக்கும் இந்தமார்கெட் கட்டிடம் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் அமைக்கப்பட்டு இருப்பது வருத்தத்திற்குறியதாகும் எனக்குறிப்பிட்டார். இந்தபுகார் குறித்து கூத்தாநல்லூர் நகராட்சிஆணையர் ராஜகோபாலிடம்தெரிவித்தபோது, கடந்த 9ம் தேதிதான் தான் இங்கு பொறுப்பேற்றுஇருக்கிறேன் ,  புதிதாககட்டப்பட்டிருக்கும் மார்க்கெட் கட்டித்தைபார்வையிட்டேன் அதில்சிலவசதிகுறைபாடுகள்இருப்பதுஉண்மைதான் , அதுகுறித்து பேசகட்டிடத்தைகட்டியஒப்பந்தக்காரார் வரவழைக்கப்பட்டிருப்பதாகவும் , அவரிடம் பேசி அவைகளைசரிசெய்துதேர்தல்முடிந்தபிறகுகட்டிடம் வியாபாரிகள்வசம் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும் எனவும், சுகாதாரத்திற்குஏற்றவகையிலும் பொதுமக்கள்வசதியாகவந்துபோகும்படியும் கட்டிடம் வடிவமைக்கப்படும்  என்றார்.
கட்டிடத்திற்குபொதுமக்களின் வரிப்பணம் ஏறத்தாழ 50 லட்சம் ரூபாய்வரைசெலவிடப்பட்டுவிட்டநிலையில்மீன்மார்க்கெட் தங்களுக்குபயன்பாட்டிற்குவரவில்லையேஎன்பது பொதுமக்களின் ஏக்கமாகஉள்ளது.

Tags : fish market ,Koothanallur ,
× RELATED வாலிபருக்கு கத்திக்குத்து 10 பேர் கைது வேலூர் மீன் மார்க்கெட்டில் தகராறு