×

மாவட்டம் மயில்சாமி அண்ணாத்துரை வழங்கினார் படியுங்கள் இலக்கை எட்ட முடியாமல் வரிவசூலில் திணறும் திருமங்கலம் நகராட்சி

ஞாயிறு தோறும்
திருமங்கலம், மார்ச் 19: திருமங்கலத்தில் வரிவசூலில் இலக்கை எட்டமுடியாமல் நகராட்சி திணறி வருகிறது.திருமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த ஆண்டு நூறுசதவீதம் வரிவசூலை செய்யும் பணிகளில் நகராட்சி ஈடுபட்டுள்ளது. நூறுசதவீதம் வரிவசூல் மூலமாக திருமங்கலம் நகராட்சிக்கு 6.21 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். கடந்த இரண்டு மாதங்களாக இந்த நகராட்சியில் சொத்துவரி 54.41 சதவீதம், காலியிட வரி 38.51 சதவீதம், பாதாளச்சாக்கடை வரி 6.58 சதவீதம், தொழில்வரி 37.28 சதவீதம், குத்தகை இனவரிகள் 80 சதவீதம், குடிநீர் வரி 74 சதவீதம் வசூலாகியுள்ளது.

மார்ச் 31ம் தேதிக்குள் நூறுசதவீத வரிவசூலிப்பை நகராட்சி முடிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், நகராட்சி 35 பணியாளர்களை நியமித்து வரிவசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இருப்பினும் வரிவசூலில் இலக்கை எட்டுவதில் கடும் சிரமங்கள் உள்ளன. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,`` மார்ச் 31க்குள் நூறுசதவீதம் வரிவசூலிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது வசூல் குறைந்துள்ளது. 3.45 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது. இன்னும் 2.76 கோடி ரூபாய் வரி வசூலிக்க வேண்டியுள்ளது. இதற்கான பணிகளில் நகராட்சி ஈடுபட்டுள்ளது’’ என்றனர்.


Tags : Annamatturai Annapattiram ,district ,municipality ,Tirumangalam ,
× RELATED அறந்தாங்கியில் வெறிநாய் கடித்து 2 பேர் படுகாயம்