×

நிலையான வருவாய் தரக்கூடியது... நெருக்கடி காலங்களில் கை கொடுக்கும்நடமாடும் ‘நாட்டுக்கோழி வங்கி’

நம் நாட்டின் தட்பவெட்ப சூழ்நிலைக்கு கோழி வளர்ப்பு மிகவும் ஏற்றதாகும். விவசாயம் சார்ந்த தொழில்களில் கோழி வளர்ப்பு மிகவும் ஏற்றதாகும். கோழி வளர் ப்பில் முட்டை கோழி மற்றும் பிராய்லர் கோழி பண்ணைகள் அதிகம் காணப்படுகி றது. இந்த தொழில் பெரிய பண்ணையாளர்களால் மட்டுமே நடைமுறை படுத்தப் படுகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகள் இந்த பெரிய பண்ணையாளர்களுடன் போட் டியிட முடியாது. இதனால் சிறு விவசாயிகள் நாட்டுக்கோழி, காடை, வான்கோழி, மற்றும் வாத்து போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர், இதனால் சிறு விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது.  மாற்று கோழி வளர்ப்பு என்பது முட்டை கோழி மற்றும் பிராய்லர் கோழி பண்ணை கள் தவிர்த்து நாட்டுக்கோழி, காடை, வான்கோழி மற்றும் வாத்து போன்ற கோழிகளை வளர்க்கலாம் என கால்நடைத்துறை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் பேராசிரியர்கள் ரிச்சர்டுஜெதீசன், சிபிதாமஸ், ஜெயலலிதா ஆகியோர் தெரிவித்திருப்பதாவது: நடமாடும் நாட்டுகோழி வங்கி:  இன்றைய சூழ்நிலையில் கறிக்கோழியின் விலையைவிட நாட்டுக்கோழி இறைச்சியின் விலை இருமடங்காக இருந்தாலும், மக்கள் நாட்டுக்கோழி இறைச்சியை வாங்கி உண்ணும் பழக்கம் அதிகமாக உள்ளது. நாட்டுக்கோழிகளை விற்பனை செய்வது எளிது. கிராமப்புற மக்களின் புரதத் தேவையை நிறைவு செய்வதில் நாட்டுக்கோழி முதன்மை யான பங்கு வகிக்கின்றது. வணிக சந்தையில் நல்ல விலைக்கு நாட்டுக் கோழிகளை விற்க முடியும். மேலும் கிராமப்புற மக்களின் திடீர் தேவைகளை நிறைவு செய்யும் ஆதாரமாகவும், நிலையான வருவாய் தரக் கூடியதாகவும், நெருக்கடி காலங்களில் கை கொடுப்பதாகவும் இருக்கின்றது. எனவே நாட்டுக் கோழிகளை “நடமாடும் வங்கி” என்று கூறலாம்.

புறக்கடை மூலம் நாட்டுக்கோழி: கிராமங்களில் பெரும்பாலும் நாட்டுக்கோழிகள் புறக்கடை முறையிலேயே வளர்க்கப் படுகிறது. கோழிகளுக்கு பிரத்தியேகமான யாதொரு பராமரிப்புமின்றி பணச்செலவு ஏதுமின்றி வளர்க்கப்படுகிறது. இரவில் கூடையிலோ அல்லது பஞ்சாரத்திலோ கோழி கள் அடைக்கப்படுகிறது. புழு, பூச்சிகள், தானியங்கள், இலை, தழைகளை உண்ணும். தோட்டத்தில் விளைந்த நெல், சோளம், கம்பு, கேழ் வரகு, அரிசி, குருணை போன்ற வற்றை அளித்தும் வளர்க்கப்படுகிறது. சிலர் மரச் சட்டத்தில் கம்பி வலையுடன் சிறிய பெட்டி அல்லது கூண்டு செய்து இரவில் அதில் அடைத்து வளர்க்கிறார்கள். சிலர் கம்பியினால் கூண்டு செய்து வளர்க்கிறார்கள். பலரது கோழிகள் வீட்டின் கூரையிலும், அருகிலுள்ள மரக்கிளையிலும் இரவைக் கழிக்கும். பெருநகரங்களில் வான்கோழி: கேரளா, தமிழ்நாட்டில் வான் கோழி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளன. பெரும்பா லும் கிராமப்புறங்களில் வான் கோழிகளை வீடுகளின் புறக்கடையில் வளர்த்து வருகின்ற னர். வான்கோழி வளர்ப்பை பிரபலப்படுத்துதல் என்பது மிகவும் அவசியம். சிறு விவசாயிகள், குறுவிவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த குறைந்த முதலீட்டில் உயர் வருமானம் பெற வான்கோழி வளர்ப்பு உகந்த தொழிலாகும். வான்கோழி குறிப்பிட்ட 2 முதல் 4 கிலோ எடை பெற்றவுடன் விற் பனை செய்து விடுதல் வேண்டும். வான்கோழி இறைச்சியானது நாட்டுக்கோழி இறை ச்சியை விட விலை சிறிது அதிகமாகும். உயர்ந்த ரக வான்கோழிகளை மக்கள் வளர் த்து அதிக லாபம் பெறலாம்.

குடும்ப வருமானத்திற்கு வாத்து வளர்ப்பு: தமிழகத்தில் வாத்து வளர்ப்பானது ஒரு பரம்பரைத் தொழிலாகக் கருதப்பட்டு வருகி ன்றது. வாத்துடன் மீன் வளர்ப்பு பல இடங்களில் காணப்படுகிறது. வாத்தின் எச்சம் மீன்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. மீன் வளர்க்கும் குளம் 30 அடி நீளம் 20 அடி அகலம் அமைத்து வாத்து கூண்டின் அளவு 10 அடி நீளம் 8 அடி அகலம் அமைத்து இதில் முறையாக 300 மிருங்கல் மீன்கள் மற்றும் 10 வாத்துகள் வரை வளர்க்கலாம். இதன் மூலம் அவர்களது குடும்ப வருமான த்திற்கு தேவையான பொருளாதாரம் கிடைக்கிறது. மேலும் வாத்து கறி நல்ல உணவாக வும் அமைந்து பண்ணையாளர்களை சத்து குறைபாட்டில் இருந்து பாதுகாக்கிறது.
காடை வளர்ப்பில் லாபம்: ஜப்பானிய காடைகள் 6வார வயதில் முட்டை விடத்துவங்கும். முறையான பரா மாரி ப்பில் ஒரு ஆண்டில் 260முட்டைகள் இடும். ஜப்பானிய காடை முட்டை 13-15 கிராம் எடை இருக்கும். ஜப்பானிய காடை முட்டை மற்றும் இறைச்சி குழந்தைகள், வயோதி கர்களின் சுவாச சம்பந்தமான உபாதைகளை போக்கும். அத்துடன் கல்லீரல், சிறுநீரகம் உறுப்புகளின் ஸ்திர தன்மையை மேம்படுத்தும்.சர்க்கரை நோய், ரத்தசோகை, ஆஸ்துமா, வயிற்று புண் போன்ற உபாதைகளுக்கு ஏற்றது எனவும் நம்பப்படுகிறது. கிராம மகளிர் எளிதாக மாதம் 400 காடைகளை வளர்த்து விற்று ரூ.2 ஆயிரம் வரை லாபம் ஈட்ட முடியும்.

இறைச்சிக்காக கின்னி்க்கோழி: கின்னிக்கோழிகள் சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு புறக்கடை முறையில் வளர்க்கப்படுகிறது. கின்னிக்கோழிகள் பெரும்பாலும் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன. திறந்தவெளி மேய்ச்சல் முறையில் வளர்ப்ப தற்கு ஏற்றதாக உள்ளன. ஒரு ஏக்கரில் 500 முதல் 600 கின்னிக்கோழிகள் வளர்க்கலாம். பெரும்பாலான நாடுகளில் கின்னிக்கோழிகள் நாட்டுக்கோழிகளுடன் சேர்த்து புறக் கடையில் வளர்க்கிறார்கள். இம்முறையில் வளர்த்தால் பராமரிப்பு கவனம் மற்றும் தீவன செலவை குறைக்கலாம். கினிக்கோழிகள் இறைச்சி மிருதுவாகவும், செந்நிற த்திலும், காட்டுப்பறவையின் இறைச்சிக்குரிய வாசனையுடன் இருக்கும். அலங்கார கோழிமாற்று கோழி வகைகளில் அலங்கார கோழி வகைகள் உள்ளது. கோழி வகைகளில் பஞ்சு கோழி அல்லது  போலிஷ்காப் போன்ற வகைகள் உள்ளது. இந்த அலங்கார கோழி வகைகளை மக்கள் விரும்பி வளர்த்து சந்தையில் ஜோடியாக விற்பார்கள். இது போல் புறா, பச்சைக்கிளி போன்ற பறவைகளையும் சில பண்ணையாளர்கள் வளர்த்து விற்பனை செய்து வருகிறார்கள்.

Tags : bank ferry bank ,
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...