×

தர்பூசணி ஜூஸ் விற்பனை ஜோர்

வத்தலக்குண்டு, மார்ச் 19: கோடை வெயிலின் தாக்கம் இந்தாண்டு முன்னரே துவங்கி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மதிய வேளைகளில் சாலைகள், வீதிகளில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியே காணப்படுகிறது. எனினும்
தேவை கருதி வெளியே வருபவர்கள் பழ ஜூஸ், கரும்புச்சாறு, இளநீர் போன்றவற்றை பருகி வெயிலை சமாளித்து வருகின்றனர்.பழ ஜூஸ் ரூ.50க்கும், இளநீர் ரூ.30க்கும், கரும்புச்சாறு ரூ.20க்கும் விற்கப்படுகிறது. அதேநேரத்தில் உடல் உஷ்ணத்தை குறைக்கும் தர்பூசணி ஜூஸ் ரூ.15க்கும் கிடைப்பதால் மக்கள் கூட்டம், கூட்டமாக வாங்கி பருகுகின்றனர்.நிலக்கோட்டை அருகே மல்லணம்பட்டியில் தர்பூசணி அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இதனால் நிலக்கோட்டை நெடுஞ்சாலையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட தர்பூசணி கடைகள் போடப்பட்டுள்ளன. இங்கு தர்பூசணி முழுசாகவும், அறுத்து துண்டுகளாகவும் விற்கப்படுகிறது. மேலும் பழத்தை கீத்து, கீத்தாக அறுத்து தோலை நறுக்கி அதனை சில்வர் சட்டியில் போட்டு மத்தால் கூழ் போல ஆக்குகின்றனர். பின்னர் அதனை கண்ணாடி கிளாஸில் சர்பத் ஊற்றி ஐஸ்கட்டி கலந்து கொடுப்பதால் இன்னும் கூடுதல் சுவை பெறுகிறது. இதனால் ஏராளமானோர் ஆர்வமுடன் இதனை வாங்கி பருகி வருகின்றனர்.

Tags :
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்