×

அனுமதியின்றி பிரசார வாகனங்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில் எச்சரிக்கை

மயிலாடுதுறை, மார்ச் 19: அனுமதியின்றி பிரசார வாகனங்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தேர்தல் விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் நாஞ்சில்பாலு, நகரத் தலைவர் கண்ணன், அதிமுக நகர துணை செயலாளர் கார்த்திக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடும்பையன் உட்பட பல்வேறு கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இன்ஸ்பெக்டர் டில்லிபாபு பேசுகையில், தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் அதனை அனைத்து கட்சியினரும் முறையாக பின்பற்றி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பாடல் இருக்க போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேர்தல் விளம்பரம் சம்பந்தமாக பிரசார வாகனங்கள், சுவர்விளம்பரங்கள் செய்வதற்கு தேர்தல் உதவி அலுவலரிடம் முறையாக அனுமதிபெற்று அதன்விபத்தை காவல்துறையில் தெரிவித்து அனுமதிபெற வேண்டும்.

அப்படி அனுமதி பெறாமல் பிரசார வாகனங்கள் பயன்படுத்தப்பட்டால் பறிமுதல் செய்யப்படும். தேர்தல் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு சின்னகடைவீதி, விஜயா தியேட்டர் அருகே, பாசிக்கடைத்தெரு ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். பொதுக்கூட்டம் நடத்துவதற்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்றுதான் நடத்தவேண்டும். ஒரேநாளில் பல கட்சிகள் கூட்டம் நடத்த அனுமதி கேட்டாள் முன்னுரிமை அடிப்படையில்தான் அனுமதி வழங்கப்படும். வாக்குச்சாவடி மையங்கள் அருகில் விளம்பர பேனர்கள், சுவர்விளம்பரங்கள் எழுதினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : action consultation meeting ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று 3...