×

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு இன்று முதல் வேட்புமனு தாக்கல் 5 பேருக்கு மட்டுமே அனுமதி

மயிலாடுதுறை மார்ச் 19:  வேட்புமனு தாக்கல் இன்றிலிருந்து துவங்குவதால் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு விண்ணப்பங்கள் வாங்கப்படுகின்றன. 17வது நாடாளுமன்ற தேர்தலுக்கான மயிலாடுதுறை தொகுதிக்கு மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகத்தில் இன்றிலிருந்து வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது.  இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் நேற்று இரண்டு சுயேட்சைகள் வேட்புமனுவை வாங்கிச் சென்றுள்ளனர்.  வேட்பு மனுவிற்கு கட்டணம் கிடையாது. மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனுவை மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகம் அல்லது நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர் ஒரு விண்ணப்பமும், இரண்டு உறுதிமொழிச் சான்றும் அளிக்கவேண்டும், மேலும் அரசிடம் கடன் இல்லை என்பதற்கான ‘நோ டியு’ சான்றிதழ் அளிக்கவேண்டும், உறுதிமொழிச் சான்றில் குடும்ப வரலாறே தெரிவிக்கவேண்டும், சுய விபரம், குடும்ப உறுப்பினர்கள், குடும்ப சொத்துக்கள் அசையும் சொத்து அசையா சொத்து, கடன் வகையறாக்கள், குற்றவழக்குகள் இருந்தால் அவற்றின் நிலை போன்ற அனைத்தையும் உறுதிமொழிப் பத்திரத்தில் தெரிவிக்கவேண்டும்.

அரசியல் கட்சி வேட்பாளராக இருந்தால் சாட்சிக் கையெழுத்திற்கு ஒரு நபர் போதும், சுயேட்சை வேட்பாளராக இருந்தால் 10 பேர் சாட்சிக் கையொப்பம் இடவேண்டும்.   பொதுவேட்பாளராக இருந்தால் டெப்பாசிட் தொகை ரூ.25 ஆயிரமும் ஆதிதிராவிடராக இருந்தால் ரூ.12,500 கட்டவேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் அதிகபட்சம் 3 வாகனங்களுக்குமேல் வரக்கூடாது, வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடமான ஆர்டிஓ அலுவலகத்திலிருந்து 100 மீ தூரத்தில் தடுப்பு போடப்பட்டிருக்கும், ஒரு வேட்பாளருடன் மேலும் 4 பேர் என 5 பேர்மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சுயேட்சை மற்றும் அரசியல் கட்சியாக இருந்தாலும் 5 நபர்களுக்குமேல் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடத்திற்குள் செல்லக்கூடாது. இன்று வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகம் பரபப்பாக காணப்படுகிறது.

Tags : constituency ,Mayiladuthurai ,
× RELATED மயிலாடுதுறை எம்பி தொகுதி...