நாட்டு நலப்பணி திட்ட முகாம்

ஒட்டன்சத்திரம், மார்ச் 19: ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு மலைக்கிராமம் சுரக்காய்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் 7 நாள் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது. முதல்வர் பிரிட்டோ தலைமை வகிக்க, சேக்தாவூத் துவக்கி வைத்தார். திட்ட அலுவலர் ஹெரால்டு ஜாக்சன் முகாமின் நோக்கம் குறித்து விளக்கவுரையாற்றினார். கிருபா தற்சார்பு உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் சிவக்குமார் கலந்து கொண்டு இயற்கை விவசாயத்தினால் ஏற்படும் நன்மைகள், நவதானியங்கள் உண்பதின் அவசியம், பிளாஸ்டிக் ஒழிப்பு, மரம் நடுவதன் அவசியம் குறித்து பேசினார்.முகாமில் பள்ளி வளாகம் தூய்மை செய்தல், சாலைகள் சீர்செய்தல், சமுதாய கூடங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தவிர முதலுதவி, கிராம இளைஞர்கள், மகளிருக்கான சுயதொழில், ஆளுமை பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதன் அவசியம், கல்வியின் அவசியம், உலக வெப்பமயமாதல், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதில் தலைமையாசிரியர் ஜெயபாரதி, ஆசிரியர் இளவரசன், கால்நடை மருத்துவர் வில்சன்குமார். கருப்புச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இஸ்மத் நன்றி கூறினார்.

Related Stories: