×

தேர்தல் பாதுகாப்பு பணி தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்குள் ஓய்வுபெற்ற போலீசார் செல்லக்கூடாது

திருவள்ளூர், மார்ச் 19: தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஓய்வு பெற்ற போலீசார், வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்க, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
வரும் ஏப்ரல் 18ம் தேதி தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்தில் போதிய போலீசார்  இல்லை. இது தவிர பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் அமைதியாக தேர்தல் நடத்த துணை ராணுவ படை வரவழைக்கப்பட உள்ளது. இதையடுத்து, ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினர், போலீசாரை பணியில் அமர்த்திக்கொள்ள தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற போலீசார் நியமனத்தில், 60 வயதிற்கு உட்பட்டவர்களை மட்டுமே நியமிக்கவும், துறை ரீதியாக தண்டனை பெற்றவர்கள், வழக்கு நிலுவையில் இருந்தால் அவர்களை கட்டாயமாக  நியமிக்க கூடாது.

அவர் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகளில் கட்டாயம் பாதுகாப்பில் இருக்ககூடாது. இவர்களை கூட்டம் மற்றும் வரிசையை ஒழுங்குபடுத்த, வாக்குச்சாவடிக்கு வெளியில்  மட்டுமே நியமிக்க வேண்டும். உள்ளுக்குள் அனுமதிக்ககூடாது. அவர்களுக்கு துப்பாக்கி வழங்க கூடாது. போலீசாருக்கான சீருடை அணிந்திருந்தால், அதில் அரசு வழங்கிய  பதக்கங்கள் இருக்கூடாது என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags :
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...