×

நாகை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை தொடர்பாக மனு அளிக்க வந்த மக்கள் ஏமாற்றம் தேர்தல் விதிமுறை தெரியாததால் அவலம்

நாகை, மார்ச் 19: நாகை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை சம்பந்தமாக மனு அளிக்க வந்த மக்கள், தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் கலெக்டரை சந்திக்காமல் ஏமாற்றுத்துடன் சென்றனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு  தேர்தல் நடத்தை விதி முறை அமலுக்கு வந்துள்ளதால்  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்களிடம் திங்கள் தோறும் மனு பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி தெரியாமல்  நாகை மாவட்டத்தில் குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி, வேதாரண்யம், கொள்ளிடம், தலைஞாயிறு போன்ற பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் மாவட்ட கலெக்டர்  அலுவலகத்திற்கு மனுக்களை கலெக்டரிடம் நேரில் வழங்க எராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

மனுவை எழுத்திக்கொண்டு கலெக்டரை பார்க்க சென்றவர்களை காவல் துறையினர் தேர்தல் நடைமுறையால் மனுவை கலெக்டர் வாங்ககூடாது என்பதால் மனுக்களை பெட்டியில் போட்டு விட்டு செல்லுங்கள் என்று அறிவுறித்தினர். பொதுமக்கள் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அளவில் மனு கொடுத்து எந்த பயனும் இல்லாத நிலையில் கலெக்டரை பார்த்து நேரில் மனு கொடுத்து தகவல்களை சொல்லலாம் என்று வந்த பொது மக்களுக்கு இது ஏமாற்றமாகவே அமைந்தது.

Tags : NGO ,collector ,
× RELATED வெவ்வேறு இடங்களில் சம்பவம்: ஓய்வு...