×

பறக்கும் படை கண்காணிப்பு பணியால் விவசாயிகள் பாதிப்பு தேர்தல் நடைமுறையால் குறைந்த விலைக்கு விற்பனையாகும் தர்பூசணி

செங்கல்பட்டு, மார்ச் 19: தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளால் தர்பூசணி விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பகறக்கும் படையின் சோதனையால், வெளியூர்களுக்கு வாகனங்களில் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கூறுகின்றனர். ஆண்டுதோறும், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தர்பூசணி பழத்தை பயிரிட்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்யவது வழக்கம். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தர்பூசணி பயிரிடப்படுகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர், உத்திரமேரூர், காட்டாங்கொளத்தூர், அச்சிறுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் அதிகளவில் தர்பூசணி பயிரப்படுகிறது. பணப்பயிரான இந்த தர்பூசணியை பயிரிடுவதை விவசாயிகள் ஆர்வமாக செய்கின்றனர்.

கோடை காலம் தொடங்கும் மார்ச், ஏப்ரல் மே மாதங்களில் வெப்பத்தை தணிக்க தர்பூசணியை, பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சாப்பிடுவார்கள். குறிப்பாக விளைவிக்கப்படும் தர்பூசணி ஏற்றுமதி தரம் வாய்ந்ததாக உள்ளதால், ேகரளா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய வௌி மாநிலங்கள் மற்றும் வௌிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு டன் தர்பூசணி ₹8,500 முதல் ₹10,000 வரை சந்தையில் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படுகிறது. ஜனவரியில் பயிரிப்பட்ட தர்பூசணி 60 நாள் முதல் 80 நாட்களுக்குள் அறுவடை செய்யப்படும். இதையொட்டி, தர்பூசணி பயிர் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், கடந்த 10ம் ேததி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால், அதிகளவு பணத்தை எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை மற்றும் தேர்தல் அதிகாரிகள் மூலம் ஆவணங்கள் இல்லாத பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதன் எதிரொலியாக அறுவடைக்கு தயாராக உள்ள தர்பூசணியை வாங்குவதற்கு, வௌிமாநில வியாபாரிகள் பணம் எடுத்து வந்து தர்பூசணியை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு, போதிய விலை கிடைக்காமல், தர்பூசணியை  குறைந்த விலைக்கு உள்ளூர் சந்தையில் விற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற இன்னும் 1 மாதம் இருப்பதால், தர்பூசணி வியாபாரிகள் பணம் எடுத்து வந்து நல்ல விலைக்கு தர்பூசணியை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் தர்பூசணியை பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து தர்பூசணி விவசாயிகள் கூறுகையில், தர்பூசணி சீசன் பயிர் என்பதால் இதனை கோடை காலத்தில் மட்டுமே பயிர் செய்கிறோம். 1 ஏக்கர் பயிர் செய்தவற்கு, 1 கிலோ விதை, ₹8,000 முதல் ₹12,000 வரை ெசலவாகிறது. மேலும் உரம், பூச்சிமருந்து, களை எடுத்தல், விதை நடுதல் உள்ளிட்டவைகளுக்காக குறைந்தபட்சம் வரை ₹50,000 முதல் ₹75,000 வரை செலவவாகிறது.

ஒரு ஏக்கர் பயிரில் எந்த நோயும் தாக்காமல் இருந்தால் 8 டன் முதல் 12 டன் வரை அறுவடை செய்யலாம். குறைந்த பட்சம் வியாபாரிகளிடம் ஒரு டன்னுக்கு ₹15,000 முதல் ₹20,000 விற்பனை செய்தால் ஓரளவு லாபம் பெறலாம். ஆனால் தற்போது உள்ள தேர்தல் நடைமுறையினால் அதிகளவு பணத்தை வியாபாரிகள் எடுத்துசெல்ல முடியாத நிலையில், ஒரு டன் தர்பூசணி ₹8,000 முதல் ₹10,000 வரை சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அதிக நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் கோடை காலங்களில் தர்பூசணி அதிகளவு வாங்கப்படும். இந்த லாப நோக்கத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தர்பூசணி பயிரப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் நடைமுறையால் வியாபாரிகள் லாரிகளில் பணத்தை எடுத்துவர முடியவில்லை. ஏடிஎம் மூலமும் போதுமான பணத்தை எடுக்க முடியவில்லை.

சில ேநரங்களில் நம்பிக்கையின் பெயரில் விற்பனை செய்தாலும் பணம் பெற முடியவில்லை. குறிப்பிட்ட காலத்தில் விற்பனை செய்யாவிட்டால், தர்பூசணி பழங்கள் விணாகி விடும்.
இதனால் வேறு வழியின்றி குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறோம். இதில், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. கொள்முதல் செய்யும் வௌிமாநில வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் கமிஷன் தர்பூசணி வியாபாரிகளுக்கு தடையின்றி வியாபாரம் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Flying Force Surveillance Worker ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி...