×

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு செல்போன்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்

காஞ்சிபுரம், மார்ச் 19: நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் ஆவின் நிறுவனம் தயாரிக்கும் பால், நெய், குளிர் பானங்கள் மற்றும் இதர பொருட்கள் மீது தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பொன்னையா ஒட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் ஆவின் நிறுவனம் தயாரிக்கும் பால், நெய், குளிர் பானங்கள் மற்றும் இதர பொருட்கள் மற்றும் திருப்புக்குழி ஊராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் பயன்படுத்தும் செல்போன் மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தங்கள் புகார்களை தெரிவிக்க காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1800 4257 087 செயல்படுகறது. மேலும், 1950 என்ற இலவச அழைப்புடன் கூடிய வாக்காளர் உதவி மையம் செயல்படுகிறது.
வாக்காளர் பட்டியல் வாக்குச்சாவடி தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஏதேனும் இருந்தால், இந்த கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு, தேவையான தகவல்களை பெறலாம் என கலெக்டர் பொன்னையா தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) அருண், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், காஞ்சிபுரம் சப் கலெக்டசர் சரவணன்.மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசராவ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : elections ,Lok Sabha ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...