×

திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிக்கு தீவிர பணி கரூர் நெசவாளர் அணி ஆலோசனை கூட்டத்தில் முடிவு

கரூர், மார்ச் 19: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிக்கு தீவிரமாக பணியாற்றுவது என கரூரில் நடந்த நெசவாளர் அணி ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திமுக நெசவாளர் அணி சார்பில் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் நாகலிங்கம் வரவேற்றார். மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி முன்னிலை வகித்தார். மாநில நெசவாளர் அணிச் செயலாளர்கள் சச்சிதானந்தம், பழனிசாமி, அன்பழகன், பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாநில நெசவாளர் அணிச் செயலாளர் பரணி மணி நன்றி கூறினார். இந்த கூட்டத்தில், அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மாநில நெசவாளர் அணி தலைவராக நன்னியூர் ராஜேந்திரனை நியமனம் செய்த தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது. நடைபெறவுள்ள 17வது பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நலன் கருதி சிறப்பான முறையில் மக்கள் ஏற்கும் வகையில் தமிழகத்தில் கூட்டணியை முன்னெடுத்து, நிறைவு செய்த தலைவரை பாராட்டி மகிழ்வது. பாராளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களின் வெற்றிக்காகவும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் நெசவாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சிறப்பாக பணியாற்றி அனைத்து கழக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய பாடுபடுவது. மக்களிடம் செல்வோம், சொல்வோம், மனங்களை வெல்வோம் என்ற தலைவரின் மந்திரத்தை முன்னெடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள 12617 ஊராட்சிகளிலும் ஊராட்சி சபை கூட்டம் நடத்தி தற்போதைய ஆட்சியின் அவலங்களையும், மக்கள் விரோத நடவடிக்கைகளையும் விளக்கி  அனைத்து மாவட்ட தேர்தல் பொறுப்பாளரையும் வழி நடத்தி அவ்வப்போது தக்க அறிவுரைகளை வழங்கி மக்களின் மனதை வென்ற தலைவருக்கு இந்த கூட்டம் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : DMK ,Alliance Parties ,team consultation ,Karur Neesar ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி