×

தமிழகத்தில் 2 ஆண்டுகளாக நடந்த நகை கொள்ளை, செயின் பறிப்புகளில் ஈரானை சேர்ந்த கும்பல் நேரடி தொடர்பு ஆதாரங்களை திரட்டுவதில் சிறப்பு குற்றப்பிரிவு தீவிரம்

வேலூர், மார்ச் 19: கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் நடந்த நகை கொள்ளை, செயின் பறிப்பு சம்பவங்களில் ஈரானிய கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகவும், ஆதாரங்களை திரட்டுவதாகவும் சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், பெரும்பாலான செயின் பறிப்பு, நகை கொள்ளை சம்பவங்களில் ஈரானிய கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் ஆதாரங்களை திரட்டுவதில் தீவிரம் காட்டி வருவதாக கூறுகின்றனர்.இதுகுறித்து வேலூர் மாவட்ட சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:வேலூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் ஏராளமான செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. மேலும் நகை கொள்ளை சம்பவமும் நடந்துள்ளது. இந்த வழக்குகளில் துப்பு துலக்க பல்வேறு வீடியோ ஆதாரங்கள், கைரேகை பதிவுகளை சேகரித்து விசாரித்து வருகிறோம். இதுவரை திரட்டிய ஆதாரங்கள் அடிப்படையில், வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த முக்கிய நகை கொள்ளைகள் மற்றும் குறிப்பிட்ட செயின் பறிப்பு சம்பவங்களில் ஈரான் கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.இதே கும்பலுக்கு வேலூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கர்நாடகாவில் நடந்த செயின் பறிப்பு மற்றும் கொள்ளை சம்பவங்களிலும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கும்பலை சேர்ந்தவர்கள் பெங்களூரு, சென்னை போன்ற பகுதிகளில் அதிகளவில் முகாமிட்டுள்ளனர். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக இந்தியாவுக்கு குடிபெயர்ந்த ஈரானியர்களில் சிலர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

இதுபோன்று கொள்ளையடித்த நகைகளை இங்குள்ள கும்பலை சேர்ந்த சிலரிடமே விற்பனை செய்துள்ளனர். மேலும் அடிக்கடி சென்னையில் இருந்து விமானத்தில் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு கொள்ளை கும்பல் பயணித்துள்ளதற்கான ஆதாரங்களும் திரட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து முக்கிய ஆதாரங்களை திரட்டுவதோடு, கொள்ளை கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : robbery ,Iranian ,
× RELATED ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும்...