×

சொத்து வரி முகாமில் ₹9.47 லட்சம் வசூல்

புதுச்சேரி, மார்ச் 19:  புதுச்சேரி நகராட்சி ஆணையர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகராட்சி, வருவாய் பிரிவு-1ன் மூலமாக சிறப்பு வீட்டு வரி, சொத்து வரி, குப்பை வரி வசூல் முகாம் நடைபெற்று வருகிறது. அதன் மூலம் கடந்த 16, 17 ஆகிய இரு தினங்களில் சொத்து வரி ரூ.8,90,915 மற்றும் குப்பை வரி ரூ.56,640 என மொத்தம் ரூ.9,47,555 வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் முத்தியால்பேட்டை பாரதிதாசன் வீதியில் உள்ள வீட்டுவரி வசூல் மையத்தில் ரூ.72,093, கம்பன் கலையரங்கம் வீட்டு வரி வசூல் மையத்தில் ரூ.4,72,357, நெல்லித்தோப்பு வீட்டு வரி வசூல் மையத்தில் ரூ.1,93,882, முதலியார்பேட்டை மேரி வீட்டு வரி வசூல் மையத்தில் ரூ.75,067, இளங்கோ நகரில் உள்ள புதுச்சேரி கூட்டுறவு கட்டிட மையத்தில் ரூ.41,015, கொசப்பாளையம் லெனின் வீதியில் உள்ள வணிக வைசிய ஹரிஹர பஜனை மடத்தில் ரூ.93,141 வரி வசூலானது. மேலும், மார்ச் 31ம் தேதி முடிய அனைத்து நாட்களில் வழக்கமாக வரி செலுத்தும் மையங்களில் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெறும். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் தங்களது நிலுவை மற்றும் நடப்பாண்டு வரியினை செலுத்தி அபராத தொகையை தவிர்த்து பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் propertytax.puducherry.gov.in இந்த வசதியினை பயன்படுத்தி உடனே வரியினை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...