வில்லியனூரில் துணை ராணுவத்தினர் ரோந்து

வில்லியனூர், மார்ச். 19: வில்லியனூர் பகுதியில் துணை ராணுவம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ளதால் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் துறை அதிகாரிகள், போலீசார் உள்ளிட்ட பலர் தீவிர கண்காணிப்பிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கூடுதலாக துணை ராணுவம் வரவழைக்கப்பட்டு குற்ற சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை வில்லியனூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பழனிவேல் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் மேற்பார்வையில் துணை ராணுவம் மற்றும் போலீசார் வில்லியனூர் பகுதியில் ரோந்து  பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த கடைகளை அப்புறப்படுத்தினர். மேலும் சாலையில் வைத்திருந்த விளம்பர பலகைளை அகற்றுமாறும், தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுமாறும் கடைகாரர்களுக்கு அறிவுறுத்தினர். மேற்கொண்டு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories: