தேர்தல் செலவின கண்காணிப்பு பயிற்சி

புதுச்சேரி, மார்ச் 19:  புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் செலவின கண்காணிப்பு முறைகள் குறித்த பயிற்சி அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டது.  புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் செலவினம் தொடர்பான கணக்கு பராமரித்தல் குறித்த உதவி பார்வையாளர்கள், வீடியோ கண்காணிப்பு குழு, வீடியோ பதிவை பார்வையிடும் குழு, கணக்கீட்டு குழு, செலவு கண்காணிப்பு அறை மற்றும் புகார் மையம், ஊடக சான்றளிப்பு குழு, பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு ஆகிய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களை சேர்ந்த அதிகாரிகளுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் செலவின கண்காணிப்பு முறைகள் குறித்த பயிற்சி வகுப்பு நேற்று வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தலைமை தாங்கினார். துணை ஆட்சியர் (வடக்கு) சுதாகர், தேர்தல் நடத்தை தனி அதிகாரி சிவக்குமார், தேர்தல் செலவின தனி அதிகாரி அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

Related Stories: