திமுக கூட்டணிகட்சி வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும்

விழுப்புரம், மார்ச் 19:    திமுக கூட்டணிகட்சி வெற்றிக்கு பாடுபட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ கேட்டுக்கொண்டுள்ளார். விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் பொன்முடி எம்எல்ஏ தலைமை தாங்கினார். பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், விடுதலைசிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழுப்புரம் தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ரவிக்குமார், கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் கவுதமசிகாமணி ஆகியோரை அறிமுகப்படுத்தி பொன்முடி எம்எல்ஏ பேசியதாவது:  தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றிபெறுவார்கள். மக்களவைத்தேர்தலுக்கு பிறகு அதிமுக ஆட்சி இருக்காது. நடைபெற உள்ள எம்பி தேர்தலோடு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலும் நடக்கிறது. இதில் திமுக அமோக வெற்றிபெறும். விழுப்புரம் மக்களவைத்தொகுதியில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். வெற்றிக்கு மாவட்டத்தில் உள்ள திமுகவினர் அயராது பாடுபட வேண்டும். கள்ளக்குறிச்சி தொகுதியில் எனது மகன் போட்டியிடுகிறார் என்பதற்காக அங்கு வரக்கூடாது. அந்தந்த ஒன்றிய, மாவட்ட, நகர நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும் 13 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: