×

சிறுப்பாக்கம் காப்பு காட்டில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு

உளுந்தூர்பேட்டை, மார்ச் 19:  உளுந்தூர்பேட்டை அருகே சிறுப்பாக்கம் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான காப்புகாடுகள் உள்ளது. சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான இந்த காப்புகாட்டில் அதிக அளவு தைலமரக்கன்றுகள் வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த காப்புகாட்டிற்கு உட்பட்ட இடத்தில் மண் வளத்திற்கு ஏற்றாற் போல் மாற்று மரக்கன்றுகள் நடுவது குறித்து இந்திய வனத்துறை விஞ்ஞானி மோகித் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தைலமரக்கன்றுகள் மூலம் வனத்துறைக்கு கிடைக்கும் வருவாய் மற்றும் மாற்று மரக்கன்றுகள் வைப்பதின் மூலம் மண் வளம் பாதிக்காமல் அதிக மகசூல் கிடைக்குமா என்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது மாநில, மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags : Forestry Inspectorate Forest Inspectorate ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை