தேர்தல் செலவுகணக்கு பட்டியல் அனைத்துக்கட்சியினர் ஒப்புதல்

விழுப்புரம், மார்ச் 19:     அரசியல் கட்சிகளின் செலவுகணக்கை தயார் செய்ய செலவுபட்டியல் அனைத்துக்கட்சி பிரமுகர்களிடமும் ஒப்புதல் பெறப்பட்டது. மக்களவைத்தேர்தலையொட்டி அரசியல் கட்சியினரால் விளம்பர வாகனங்கள், ஒலிபெருக்கிகள், போஸ்டர்கள், கட் அவுட்டுகள் மற்றும் இதர வகைகளில் செலவிடப்படும் செலவின கணக்குகளை கணக்கிடும் வகையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு விலைப்பட்டியல் தயார் செய்வதற்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் கூட்டம் ஆட்சியர் சுப்ரமணியன் தலைமையில் நடந்தது.   இக்கூட்டத்தில், மாவட்ட குழுவினர்களால் வழங்கப்பட்டுள்ள விலைப்பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா மற்றும் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அனுசுயாதேவி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) பிரபாகர், அனைத்து சட்டமன்ற உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைத்து தாசில்தார்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட

அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: