×

பந்தலூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

பந்தலூர், மார்ச் 15:   பந்தலூர் பஜாரில் வருவாய் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதையடுத்து, பந்தலூரில் வருவாய் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. வட்டாட்சியர் அலுவலகம் அருகே துவங்கிய பேரணியை வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து துவக்கி வைத்தார். இப்பேரணி பஜார் வீதி, புதிய பஸ் நிலையம் வழியாக சென்று பழைய பஸ் நிலையம் அருகே நிறைவடைந்தது. இதற்கு தேர்தல் பிரிவு வட்டாட்சியர் நடேசன் முன்னிலை வகித்தார். பேரணியில் வாக்களிப்பது ஜனநாயக கடமை, அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள். அதனை தொடர்ந்து வாக்காளர்கள் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் வாக்காளர்களும் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட்டது. இதில் பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் தேர்தல் பிரிவு உதவியாளர் சக்கீர் வருவாய் ஆய்வாளர்கள் சாந்தி, காமூ, கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார், ஸ்ரீஜா, அசோக்குமார், நந்தகோபால் உட்பட பலர் கலந்துகொண்டனர். மஞ்சூர்: தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி அரசுப் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.  மஞ்சூர் அரசு பெண் உயர்நிலைப்பள்ளி சார்பில் தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி வளாகத்தில் துவங்கிய இப்பேரணியில் குந்தா வருவாய் ஆய்வாளர் ராமசுப்பு, கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார், ஐயப்பன், ராஜன், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் நுற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியின் போது வாக்களிப்பதன் அவசியம் குறித்து கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து மஞ்சூர் பஜாரில் மாணவிகள் மனித சங்கிலி ஏற்படுத்தி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags : Voter awareness rally ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி