டாஸ்மாக் கடை மற்றும் ஓட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது

கோவை, மார்ச் 15: கோவை போத்தனூர் சாரதா மில் ரோட்டில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இரவு கடையின் ஷட்டரை தட்டி வாலிபர் ஒருவர் மதுபானம் கேட்டுள்ளார். அப்போது டாஸ்மாக் ஊழியரான ரகுபதி கடையை மூடிவிட்டதால் நாளை வருமாறு அந்த வாலிபரிடம் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த வாலிபர் சென்று விட்டார். இதையடுத்து அதிகாலையில் அங்கு வந்த வாலிபர் பெட்ரோல் குண்டினை டாஸ்மாக் கடை மற்றும் அருகில் இருந்த ஓட்டல் மீது வீசி விட்டு சென்றார். இதில் ஓட்டலில் வைத்திருந்த பேனர் எரிந்தது. இது தொடர்பாக ரகுபதி போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், அந்த வாலிபர் போத்தனூர் சின்னமுத்து சந்துவை சேர்ந்த யாசர் முசாபத்(24), என்பதும் மதுதராத ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசியதும் தெரிந்தது. மேற்கொண்டு நடத்திய விசாரணையில், அன்றைய தினம் இரவில் அதே பகுதியில் உள்ள மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான கடைக்கு சென்ற யாசர் முசாபத் செல்போன் சார்ஜர் கேட்டுள்ளார். மாரியப்பன் தர மறுக்கவே யாசர் முசாபத் கொலைமிரட்டல் விடுத்து. அங்கிருந்த சி.சி.டி.வி.கேமராக்களை உடைத்து விட்டு சென்றுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து கொலை மிரட்டல், பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிந்து யாசர் முசாபத்தை கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: