பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.5.47 லட்சம் பறிமுதல்

கோவை, மார்ச் 15: கோவை மாவட்டத்தில் நடந்து வரும் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.5.47 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.  கோவை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி உரிய ஆவணங்கள் இன்றி பொள்ளாச்சியில் ரூ. 3 லட்சம் ரொக்கமும், வால்பாறையில் ரூ.2.47 லட்சமும் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள சார் நிலை கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே போல் நேற்று பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனைமலை, காளியாபுரத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 354 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட உள்ளதாக கோவை கலெக்டர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: