×

நாமக்கல் மாவட்டத்தில் இணையவழி குற்றங்களை தடுக்க வாட்ஸ் அப் குரூப் தொடக்கம்

நாமக்கல், மார்ச் 15: நாமக்கலில் இணையவழி குற்றங்களை தடுக்க வாட்ஸ் அப் குரூப் தொடங்கப்பட்டுள்ளதாக எஸ்பி அருளரசு தெரிவித்துள்ளார்.இணையவழி குற்றங்களை  தடுப்பது குறித்த பயிற்சி முகாம், நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. எஸ்பி அருளரசு தலைமை வகித்தார். சென்னையை சேர்ந்த சைபர் கிரைம் சைக்காலிஜிஸ்ட் வினோத்குமார் பயிற்சி அளித்தார். இதில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 12 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு இணைய வழியாக நேரடியாகவும், மறைமுகமாகவும் நடக்கும் குற்றங்கள் குறித்தும் அவற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் தடுப்பது குறித்து படக்காட்சிகளுடன் விளக்கப்பட்டது. பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்கள் கல்லூரிகளில் தாங்கள், சந்திக்கும் நபர்களிடம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. முகாமில் சைபர் கிரைம் சைக்காலிஜிஸ்ட் வினோத்குமார் பேசுகையில், ‘தேவையற்ற போட்டோ மற்றும் வீடியோக்களை சேர் செய்ய வேண்டாம். அடிக்கடி செல்போனில் செல்பி எடுப்பது போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும். இலவசமாக வைபை கிடைக்கிறது என்பதற்காக அந்த இடத்தில் இருந்து கொண்டு முக்கிய ஆவணங்களை செல்போன் மூலம் அனுப்ப கூடாது.

குறிப்பாக, தேவையற்ற செயலியை தரவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும், காவல் துறையின் செல்போன் எண்களை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். தொடர்ந்து, இணையவழியாக தங்களுக்கு தொல்லை ஏற்படும் போது காவல் துறையை அணுக வேண்டும் என்றார். தொடர்ந்து, எஸ்பி அருளரசு பேசுகையில், செல்போனில் ரகசியங்களை பாதுகாக்க கூடாது. செல்போன் ரிப்பேர் ஏற்பட்டால் கடைகளில் கொடுத்து பழுது நீக்க பெண்களே நேரில் செல்வதை தவிர்க்க வேண்டும்.  தங்கள் வீட்டில் இருக்கும் ஆண்கள் மூலம் அதை கொடுத்து அனுப்ப வேண்டும். செல்போனில் பழுது எனில் நம் கண்ணே முன்னே பழுதை நீக்க வேண்டும். குறிப்பாக, பழுது ஏற்பட்ட செல்போனை உடைத்து விடலாம் அல்லது வீட்டிலேயே வைத்து கொண்டு புதிய செல்போனை வாங்குவது சிறந்தது. மேலும் செல்போன், லேப்டாப், டேப் உள்ளிட்டவற்றில் உள்ள பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றி கொண்டே இருக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் இணையவழியாக நடந்த குற்றங்களின் அடிப்படையில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளை ஒன்றிணைத்து புதியதாக வாட்ஸ் ஆப் குரூப் ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த வாட்ஸ் ஆப் குரூப்பில் கல்லூரி மற்றும் வெளியிடங்களில் ஏற்படும் இணையவழி குற்றங்களை கண்டறிந்து பதிவிட்டால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : cyber crimes ,Vadus Up Group ,Namakkal district ,
× RELATED தடையை மீறி இறைச்சி விற்பனை