×

மாவட்டம் முழுவதும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு தொடக்கம்; 485 பேர் ஆப்சென்ட்

தர்மபுரி, மார்ச் 15: தர்மபுரி மாவட்டத்தில், 10ம் வகுப்பு தேர்வு பிற்பகல் நேரத்தில் முதன்முறையாக நேற்று தொடங்கியது. 22,512 பேர் தேர்வு எழுதினர். 485 பேர் தேர்வு எழுத வரவில்லை. தர்மபுரி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மார்ச் 29ம் தேதி வரை நடக்கிறது. 89 தேர்வு மையங்களில் 22 ஆயிரத்து 997 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 22,512 பேர் தேர்வு எழுதினர். 485 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு பணியில், 89 முதன்மை கண்காணிப்பாளர்கள், 89 துறை அலுவலர்கள், 1,308 அறை கண்காணிப்பாளர்கள் என மொத்தம், 1,486 பேர் ஈடுபட்டுள்ளனர். தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க, 5 அதிகாரிகள் தலைமையில் 5 பறக்கும் படைகளும், 250 பேர் கொண்ட பறக்கும் படையினரும் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை பிளஸ் 1 தேர்வு நடந்தது. இதனால் பிற்பகல் 2 மணி முதல் 4.45 மணிவரை 10ம் வகுப்புக்கு தேர்வு நடந்தது. முதன் முறையாக பிற்பகல் நேரத்தில் 10ம் வகுப்பு தேர்வு நடந்தது.  இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘விடைத்தாளில் எழுதிய அனைத்து விடைகளையும் முழுவதுமாக தாமே அடித்துவிடும் நிகழ்வானது, ஒழுங்கீன செயல் என கருதப்படும். தேர்வு முடிவு நிறுத்தம் செய்யப்படுவதுடன், அத்தேர்வர் அடுத்துவரும் இரு பருவங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்க இயலாது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 10ம் வகுப்பு தேர்வு பிற்பகலில் முதன் முறையாக தொடங்கியுள்ளது. இந்த தேர்வு தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு எழுதமட்டுமே பிற்பகல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அறிவியல், கணிதம், சமூகஅறிவியல் பாடம் வழக்கமான காலை நேரத்தில் நடக்கும். பிளஸ் 1 வகுப்புக்கு தேர்வு நடக்கும் நாட்களில், பிற்பகலில் 10ம்வகுப்புக்கு தேர்வு நடக்கிறது,’ என்றார்.

Tags : District ,SSLC Public Dates ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...