×

17 வாக்குச்சாவடிகள் இடமாற்றம்

புதுச்சேரி, மார்ச் 15: புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரிலும் ஒப்புதலின்படியும் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் கலந்தாலோசனையின் படியும் பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு சில சட்டமன்ற தொகுதிகளின் 17 வாக்குச்சாவடிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தகவல் மாவட்ட தேர்தல் அதிகாரியின் அலுவலக தகவல் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் துறையின் இணையதள முகவரியான https://ceopuducherry.py.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இவை வாக்காளர்களின் தகவலுக்காக வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...