×

பாஜக ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி, மார்ச் 15: புதுச்சேரி மாநில பாஜக சார்பில், வரும் மக்களவை தேர்தலில் பணியாற்றுவது, கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசிக்கும் வகையிலான சந்திப்பு கூட்டம் தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், நியமன எம்எல்ஏக்கள் செல்வகணபதி, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக தேசிய அமைப்பு இணை பொதுசெயலாளர் சந்தோஷ் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள், மக்களவை தொகுதி பொறுப்பாளர்கள், மக்களவை கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தேர்தல் குழு பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள், கட்சி மூத்த உறுப்பினர்களுக்கு மக்களவை தேர்தல் மற்றும் கூட்டணி வேட்பாளருக்கு ஆற்றவேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலaன், பாஜக கடலூர் மாவட்ட பொறுப்பாளர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : BJP Consultative Meeting ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...