×

கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுகாதாரத்துறை அலுவலக பகுதியில் கேள்விக் குறியாகும் சுகாதாரம்?

விருதுநகர், மார்ச் 15: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை கட்டிடத்தில் மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட குடும்ப நல அலுவலகம், உடற்பயிற்சி கல்வி மண்டல ஆய்வாளர் அலுவலகம், உதவி தொடக்கல்வி அலுவலகம், மாவட்ட புதுவாழ்வு திட்ட அலுவலகம், நில அளவை உதவி இயக்குநர் அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், புள்ளியல்துறை துணை இயக்குனர் அலுவலகம், கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் 200க்கும் அதிகமான அலுவலர்கள் பணியில் உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இரண்டு மாடி கட்டிடத்தின் அனைத்து உள் மற்றும் வெளிப்புற பகுதிகள் சுகாதாரமற்ற வகையில் குப்பையாக காட்சி தருகிறது. கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தொட்டிகள் நிறைந்து கழிவுநீர் வெளியே வருகிறது. இதனால் துர்நாற்றம் அலுவலக பகுதிகளிலும் வீச்சமெடுக்கிறது. அலுவலர்கள் அமர்ந்து பணிகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவுநீரில் இருந்து புழுக்கள் வெளியேறுவதால் சுகாதாரக்கோடு உருவாகி உள்ளது. வீடு, வீடாக சென்று சுகாதாரத்தை அறிவுறுத்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் முதலில் தங்களது அலுவலக வளாகப்பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென பிறதுறை அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : office ,collector ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...